Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ரஜினியின் அற்புதம்-அதிசயம் பேச்சும், எஸ்.ஏ.சந்திரசேகரின் வேண்டுகோளும்!

ரஜினியின் அற்புதம்-அதிசயம் பேச்சும், எஸ்.ஏ.சந்திரசேகரின் வேண்டுகோளும்!

தமிழகத்தில் அதிமுக ஆட்சி நீடித்து வருவது ஒரு அதிசயம் மற்றும் அற்புதம் என்று கூறிய ரஜினியிடம் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி ஒரு வேண்டுகோளை விடுத்துள்ளார்.

நேற்று சென்னையில் நடைபெற்ற ’கமல்ஹாசன் 60’ என்ற விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்டு பேசியபோது, ‘தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஆட்சி 4 மாதம் அல்லது 5 மாதங்களுக்கு மேல் நீடிக்காது என்று கிட்டத்தட்ட தமிழகத்தில் உள்ள 99 பேர் கூறினார்கள் ஆனால் அதிசயம் நடந்தது, அற்புதம் நடந்தது, அவரது ஆட்சி தொடர்ந்து கொண்டே உள்ளது.

நேற்றும் இந்த அதிசயம் அற்புதம் நடந்தது, இன்றும் அதிசயம் அற்புதம் நடந்தது, நாளையும் இதே அதிசயம் அற்புதம் நடக்கும் என்று ரஜினிகாந்த் கூறியபோது கரவொலி விண்ணை பிளந்தது. நடிகர் ரஜினிகாந்த் தனது ஆட்சி வருங்காலத்தில் மலரும் என்பதையே அவர் நாளை அற்புதம் நடக்கும் என்று கூறியுள்ளார் என்பது குரிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இதே விழாவில் பேசிய நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்கள், ‘கமலஹாசன் துணிச்சலுடன் அரசியலில் களமிறங்கியது போல் ரஜினிகாந்த் அவர்களும் அரசியலுக்கு வேண்டும் என்று அவரது கோடானு கோடி ரசிகர்கள் காத்துக் கொண்டிருப்பதாகவும், ரஜினியும் கமலும் சேர்ந்து ஒரு நல்ல ஆட்சியை தரவேண்டும் என்றும், அவர்கள் இருவரும் ஆட்சி செய்தது போதும் என நினைத்தால் அதன்பின்னர் தம்பிகளுக்கு வழிவிட வேண்டும்’ என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

Exit mobile version