சபரிமலை ஐயப்பன் கோவில் பங்குனி உத்ரம் ஆராட்டு திருவிழா இன்று முதல் தொடக்கம்!!

0
204
sabarimala-ayyappan-temple-panguni-utram-aaratu-festival-begins-from-today

சபரிமலை ஐயப்பன் கோவில் பங்குனி உத்ரம் ஆராட்டு திருவிழா இன்று முதல் தொடக்கம்!!

ஆண்டுதோறும் பங்குனி உத்ரம் ஆராட்டு திருவிழா சபரிமலை ஐயப்பன் கோவிலில் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம்.மிக விமர்சையாக கொண்டாடப்படும் இந்த திருவிழா 10 நாட்கள் நடைபெறும்.அதன்படி இந்த திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியுள்ளது.கொடியேற்றம் காரணமாக இன்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம், அபிஷேகங்கள், நெய் அபிஷேகம், பூஜைகள் உள்ளிட்டவை சாமிக்கு செய்யப்பட்டது.அதனை தொடர்ந்து கொடி வடம் மண்டபத்தில் வைத்து வழிபாடு செய்த பின்னர் கோவில் கருவறைக்குள் எடுத்து செல்லப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டது.கொடிமரம் அருகே மீண்டும் பூஜைகள் செய்யப்பட்ட நிலையில் காலை 8.20-9 மணிக்குள் கொடியேற்ற வைபவம் அரங்கேறியது.

இன்றைய முக்கிய அம்சமான கொடியேற்றத்தினை தங்க கொடி மரத்தில் கொடியினை கோவில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு ஏற்றி வைத்தார்.அந்த தருணத்தில் அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசமடைந்து ‘சாமியே சரணம் ஐயப்பா’ என்று கோஷங்களை எழுப்பினர்.

இந்த திருவிழாவின் முக்கிய அம்சமான ஆராட்டு திருவிழா பம்பை ஆற்றில் வரும் 25ம் தேதி நடைபெறவுள்ளது. அன்றைய தினமே மாலை இந்த திருகொடியானது இறக்கப்பட்டு திருவிழா இனிதே நிறைவுறும்.அதன் பின்னர் சாமிக்கு செய்யக்கூடிய பூஜைக்கு அனைத்தும் செய்து முடித்த பின்னர் கோவில் நடையும் அன்று இரவு அடைக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இந்த திருவிழாவில் பங்கேற்க ஆன்லைன் முன்பதிவு செய்தோர் மட்டுமே அனுமதிக்கப்படும் பட்சத்தில், முன்பதிவு செய்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய கோவிலில் குவிந்த வண்ணம் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.