Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சித்திரை மாத பூஜை மற்றும் விஷூ பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறப்பு!!

#image_title

சித்திரை மாத பூஜை மற்றும் விஷூ பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறப்பு!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடந்து வருகிறது. இவை தவிர பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா மற்றும் விஷூ, ஓணம் பண்டிகை உட்பட சிறப்பு நாட்களிலும் நடைதிறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும்.

இந்நிலையில் சித்திரை மாத பூஜை மற்றும் விஷூ பண்டிகையையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வரும் இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டுகிறது . தந்திரி மகேஷ்வரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை காட்டுவார்.

நேற்று இரவு மற்ற சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. மீண்டும் நடை நாளை அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகளுடன் நெய் அபிஷேகம், உதயாஸ் தமன பூஜை, களபாபிஷேகம், சகஸ்ரகலச பூஜை உள்ளிட்ட பூஜைகள், வழிபாடுகள் நடைபெறும்.

ஏப்ரல் 15- ந் தேதி விஷூ பண்டிகையை முன்னிட்டு, அதிகாலை நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். தொடர்ந்து காலை 7.30 க்கு பக்தர்களுக்கு விஷூக்கனி காண ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

பாரம்பரிய முறைப்படி, அன்றைய தினம் ஐயப்ப பக்தர்களுக்கு தந்திரி, மேல்சாந்தி ஆகியோர் விஷூ கை நீட்டமாக நாணயங்களை வழங்குவார்கள். சிறப்பு பூஜைகளுக்கு பின் ஏப்ரல் 19-ந் தேதி இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும்.

இன்று மாலை முதல் வரும் 19 தேதி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்கள்.இதற்கான ஆனலைன் முன்பதிவு தொடங்கியுள்ளது. முன்பதிவு செய்யும் பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவர்கள் என தேவசம் போர்டு தெரிவித்து.மேலும் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்து இயக்கப்படவுள்ளது.

Exit mobile version