சபரிமலை ஐயப்பன் கோவில் இந்த ஆண்டு சீசனையொட்டி நவம்பர் 15ஆம் தேதி நடை திறப்பு!!

0
104
Sabarimala Ayyappan Temple will be inaugurated on 15th November for this year's season!!

இந்த வருடம் மகரவிளக்கு பூஜை அடுத்த ஆண்டு (2025) ஜனவரி மாதம் 14-ஆம் தேதி நடைபெறும் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அதேபோல் இந்த வருடம் நடப்பு மண்டல பூஜை, மகரவிளக்கு, நடை திறப்பு, சிறப்பு பூஜை, வழிபாட்டுகள் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவில் 2024 ஆம் ஆண்டு மண்டல பூஜைக்காக அடுத்த மாதம் 15ம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும் திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

அதன் பின்பு சபரிமலை மற்றும் மாளிகப்புரம் கோவில்ளுக்கான புதிய மேல்சந்திகள், தந்திரி முன்னிலையில் மூல மந்திரம் சொல்லி பதவி எற்கிறார்கள். இதைடுத்து மறுநாள் காலை முதல் புதிய மேல்சாந்திகள் நடையை திறந்து பூஜை செய்து வழிப்பாடுகளை நிறைவேற்றுவார்கள். மேலும் டிசம்பர் 26-ஆம் தேதி மண்டல பூஜை நடைபெற்று அன்று இரவு நடை அடைக்கப்படும்.

டிசம்பர் 30-ஆம் தேதி மகரவிளக்கு பூஜைக்காக நடைத்திறக்கபடும். இந்த சீசனின் மகரவிளக்கு பூஜை அடுத்த ஆண்டு (2025) ஜனவரி மாதம் 14-ஆம் தேதி நடைபெறும். அதை தொடர்ந்து 20ஆம் தேதி சிறப்பு தரிசனத்திற்கு பந்தளம் ராஜ குடும்ப பிரதிநிதியின் வந்த பின்னர் கோவில் நடை அடைக்கப்படும் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.