Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு.!! பக்தர்கள் தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு.!

கேரள மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு நாடு முழுவதிலும் இருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக வந்து செல்வர்.

இந்நிலையில் ஐயப்பன் கோவிலில் ஐப்பசி மாத பூஜைக்காக வருகிற 16-ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு உள்ளது. மேலும், வருகின்ற 17ம் தேதி முதல் சாமி தரிசனத்திற்காக பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

மேலும், அன்றைய தினம் காலையில் புதிய மேல்சாந்திகள் குலுக்கல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் அதனைத் தொடர்ந்து 21ம் தேதி வரை பூஜைகள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது உள்ள கொரோனா கட்டுப்பாடு தளர்வுகள் காரணமாக தினமும் 15 ஆயிரம் பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். இதற்கான ஆன்லைன் முன்பதிவு நேற்று காலை முதல் தொடங்கியது.

மேலும், சாமி தரிசனத்திற்காக வரும் பக்தர்கள் 48 மணி நேரத்துக்குள் எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அல்லது தடுப்பூசி 2 டோஸ் போட்டதற்கான சான்றிதழ் கண்டிப்பாக கொண்டு வர வேண்டும் மருத்துவ சான்று மற்றும் ஆன்லைன் சான்றிதழ் ஆய்வு நிலக்கல்லில் நடைபெறும் என்று திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

Exit mobile version