Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பேரவை மாடத்திற்கு வருகை தந்த சபரீசன் மற்றும் கிருத்திகா உதயநிதி!! 

#image_title

பேரவை மாடத்திற்கு வருகை தந்த சபரீசன் மற்றும்  கிருத்திகா உதயநிதி!!

அமைச்சர் உதயநிதி மகள் தன்மயாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த பேரவைத் தலைவர்.

பேரவைக் கூட்டத்தில் பதிலுரை ஆற்றிய அமைச்சர் உதயநிதி தனது பேச்சின் நிறைவில் அமைச்சர் தங்கம் தென்னரசுவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் , மேலும் இன்று தனது மகள் தன்மயாவிற்கும் பிறந்தநாள் என்று அமைச்சர் உதயநிதி கூறினார்.

அப்போது குறுக்கிட்டு பேசிய பேரவைத் தலைவர் அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் தன்மயா இருவருக்கும் பிறந்தநாள் வாழ்த்தினை தெரிவிப்பதாக கூறினார்.

மேலும் அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் பார்வையாளர் மாடத்தில் அமர்ந்திருந்த தன்மயாவிற்கு வணக்கம் கூறி தங்களது வாழ்த்தினை தெரிவித்தனர்.

முன்னதாக அமைச்சர் உதயநிதி மானியக் கோரிக்கையில் உரையாற்றுவதை பார்ப்பதற்காக அவரது மனைவி கிருத்திகா உதயநிதி , தாய் துர்கா ஸ்டாலின் , மகள் தன்மயா , சபரீசன் ஆகியோர் பேரவை மாடத்திற்கு வருகை தந்தபோது அமைச்சர்கள் செந்தில்பாலாஜி , பொன்முடி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பலரும் மாடத்தை நோக்கி வணக்கம் கூறி உதயநிதி குடும்பத்தினருக்கு வரவேற்பு தெரிவித்தனர்.

Exit mobile version