Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பாபா திரைப்படத்தின் தோல்வியால் பிரபல தயாரிப்பாளருக்கு நேர்ந்த சோகம்!!

#image_title

பாபா திரைப்படத்தின் தோல்வியால் பிரபல தயாரிப்பாளருக்கு நேர்ந்த சோகம்

தமிழ் திரையுலகில் பிரபல தயாரிப்பாளராக பல்வேறு ஹிட் படங்களை தயாரித்து வழங்கிய ஜிவி என்று அனைவராலும் அழைக்கப்பட்ட ஜி.வெங்கடேஸ்வரன் அவர்கள் கடந்த 2003 ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஜி.வெங்கடேஸ்வரன் பிரபல இயக்குநர் மணிரத்னம் அவர்களின் சொந்த அண்ணன் ஆவார். சுஜாதா பிலிம்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி கடந்த 1986 ஆம் ஆண்டு வெளியான ‘மௌன ராகம்’ என்ற படத்தை தயாரித்தார். இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுக்கவே அடுத்து அக்னி நட்சத்திரம், குரு, காக்கி சட்டை என்ற பல வெற்றிப் படங்களை கொடுத்தார்.

கடந்த 1990 ஆம் ஆண்டு சுஜாதா பிலிம்ஸ் என்ற பெயரை ஜிவி பிலிம்ஸ் என்று மாற்றி வைத்தார். அடுத்து அவர் தயாரிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான அஞ்சலி, தளபதி உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து தாறுமாறாக வெற்றி பெற்று இந்திய திரையுலகில் புகழ்பெற்ற தயாரிப்பாளராக வலம் வந்தார்.

இந்நிலையில் வெற்றியை மட்டுமே ருசித்த ஜிவிக்கு மே மாதம், இந்திரா, உள்ளிட்ட படங்கள் தோல்வி படங்களாக அமைந்தது. இதனால் படம் தயாரிப்பதை அவர் தவிர்க்க தொடங்கினார்.

7 வருடங்களுக்கு பின் கடந்த 2001 ஆம் ஆண்டு கமலஹாசனின் ‘ஆளவந்தான்’ மற்றும் 2002 ஆம் ஆண்டு ரஜினியின் ‘பாபா’ என இரு பிரபலங்களின் படத்தின் சென்னை விநியோக உரிமையை பெற்றார். இந்த இரு படங்களால் லாபத்தை ஈட்டி விடலாம் என்று நினைத்த ஜிவிக்கு மிஞ்சியது ஏமாற்றமே. கோலிவுட்டின் வசூல் மன்னர்கள் என்று அழைக்கப்பட்ட ரஜினி, கமல் ஆகியோரின் நடிப்பில் உருவான படங்கள் படு தோல்வி அடைந்ததால் ஜிவி அப்போது பெரும் நஷ்டத்தை சந்தித்தார்.

இந்த தோல்வியில் இருந்து மீள 2002 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான ‘தமிழன்’ படத்தை தயாரித்தார். இந்த படமும் சுமார் ஹிட் படமாக தான் கொண்டாடப்பட்டது.

அதன் பின்னர் ‘ஏய் நீ ரொம்ப அழகா இருக்க’, விஜயகாந்த் நடிப்பில் வெளியான ‘சொக்க தங்கம்’ உள்ளிட்ட படங்களை இயக்கி கடுமையான நஷ்டத்தை சந்தித்தார்.

இவருக்கு அதிக நஷ்டத்தை ஏற்படுத்தியது ரஜினியின் பாபா மற்றும் கமலஹாசனின் ஆளவந்தான் படங்களை விநியோகம் செய்ததால் தான். இந்த படத்தால் ஏற்பட்ட நஷ்டங்களை ஈடுகட்ட அடுத்தடுத்து எடுக்கப்பட்ட படங்களும் தொடர் தோல்வியை சந்தித்ததால் படம் தயாரிக்க வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானார்.

இந்நிலையில் கடனை திருப்பி செலுத்த முடியாமல் கடந்த 2003 ஆம் ஆண்டு மே மாதம் தற்கொலை செய்து கொண்டார். இவரின் தற்கொலை தமிழ் திரையுலகம் மட்டும் இன்றி இந்திய திரையுலகிலும் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

தொடர் தோல்வியால் நீண்ட இடைவேளைக்கு பின்னர் ரஜினியின் படமான பாபா படத்தை விநியோகம் செய்ததால் தான் அவருக்கு இவ்வளவு பெரிய நஷ்டம் ஏற்பட்டு இருக்கிறது. இதற்கு முன் நடிகர் ரஜினியின் பல படங்களை தயாரித்து அவரது புகழுக்கு காரணமாக இருந்த தயாரிப்பாளர் ஜிவி கடுமையான கடன் சுமையில் தவித்து கொண்டிருந்த நேரத்தில் ரஜினி அவர்கள் ஒரு ரூபாய் கூட கொடுத்து உதவாதது வருத்தம் அளிக்கும் நிகழ்வாக இருக்கின்றது. ஒருவேளை மணிரத்னம், ரஜினி உள்ளிட்டவர்கள் அவருக்கு உதவி இருந்தால் இன்று நாம் தரமான தயாரிப்பாளரை இழந்து இருக்க மாட்டோம்.

Exit mobile version