கழிவறைக்கு பூஜை செய்த பொதுமக்கள்: அதிர்ச்சியில் அரசு அதிகாரிகள்

0
177

கழிவறைக்கு பூஜை செய்த பொதுமக்கள்: அதிர்ச்சியில் அரசு அதிகாரிகள்

மத்தியில் பாஜக ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்து காவி நிறத்தை பிரபலப்படுத்தி, நாடு முழுவதும் பரப்பி வருவதை அக்கட்சி ஒரு கொள்கையாக வைத்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. குறிப்பாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு அமைந்த பின்னர் மாநிலத்தில் எங்கு பார்த்தாலும் காவி மயம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பள்ளிகள் கல்லூரிகள் உள்பட அரசு அலுவலகங்கள் அனைத்திலும் ஒரே காவி மயமாக இருப்பதால் அம்மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி உள்பட பல அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தமிழகத்தில் கூட சமீபத்தில் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்த விவகாரம் பெரும் பிரச்சனையாகி தற்போதும் அது கொழுந்து விட்டு எரிந்து வருகிறது

இந்த நிலையில் உத்தரப் பிரதேச மாநில அரசின் சார்பில் கட்டப்பட்ட கழிவறை ஒன்றுக்கும் காவி நிறம் பூசப்பட்டுள்ளது. இன்னும் திறக்கப்படாத இந்த கழிவறை, காவி நிறம் பூசப்பட்டிருந்ததால் ஒருவேளை இது கோயிலாக இருக்கும் என்று நினைத்து அந்த வழியாக போவோர் வருவோர் வணங்கி செல்வதாகவும் ஒரு சிலர் பூட்டப்பட்ட அந்த கழிவறைக்க்கு வெளியே சூடம் பத்தி வைத்து பூஜை செய்வதாகவும் செய்திகள் வெளிவந்தன

இதனால் அதிர்ச்சி அடைந்த மாவட்ட நிர்வாகம் உடனடியாக காவி நிறத்தை மாற்றி பிங்க் நிறத்தில் பெயின்ட் அடித்ததோடு, கழிவறை என்ற போர்டும் வைக்கப்பட்டது. அதன்பின்னரே பொதுமக்களுக்கு அது பொது கழிப்பறை என்பதும் இவ்வளவு நாள் ஒரு கழிப்பறைக்கா பூஜை செய்தோம் என்றும் தெரிய வந்தது

காவி நிறம் என்பது புனிதமான நிறமாக இருந்ததாலும் அது இருக்க வேண்டிய இடத்தில் இருந்தால் மட்டுமே அதற்குரிய மரியாதை கிடைக்கும் என்பதே இந்த சம்பவத்தில் இருந்து உபி அரசுக்கு கிடைத்திருக்கும் பாடம் என்பதே மக்களின் கருத்தாக உள்ளது