தனுசு ராசி – இன்றைய ராசிபலன்!! எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள்!!

0
96
Sagittarius – Today's Horoscope!! A day to profit from travel opportunities!

தனுசு ராசி – இன்றைய ராசிபலன்!! எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள்!!

தனுசு ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான்.இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள். உங்கள் ராசிக்குள் சந்திராஷ்டமம் வருவதால் பொறுமையாக இருப்பது நல்லது. குடும்ப உறவினர்களிடம் சிறு சிறு பிரச்சனைகள் வரலாம் என்பதால் அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவியிடையே பிரச்சனைகள் வரலாம் என்பதால் கவனமாக இருப்பது நல்லது.

 

வருமானம் வந்து சேர்வதில் காலதாமதம் ஆகலாம். உத்தியோகத்தில் வேலை பளு அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக சில குழப்பங்கள் வந்து சேரும்.

 

அரசியலில் இருக்கும் நண்பர்கள் அமைதியாக செயல்பட வேண்டும். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வருமானம் வந்து சேர்வதில் காலதாமதம் ஆகலாம்.

 

உத்தியோகம் செல்ல பெண்களுக்கு எடுக்கும் முயற்சிகள் இழுபறி ஆகும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு உடலில் சோர்வு ஒரு வித அச்சம் வந்து நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வது அவசியம்.

 

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் குழப்பமான சூழ்நிலை நிலவும் என்பதால் கவனமாக செயல்பட வேண்டும். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வது அவசியம். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்கள் எந்த ஒரு விஷயத்திலும் கவனத்தை மேற்கொள்வது நல்லது.

 

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான மஞ்சள் நிற ஆடை அணிந்து குரு தட்சிணாமூர்த்தி சுவாமியே வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.