தனுசு – இன்றைய ராசிபலன்! நிதி கிட்டும் நாள்!

0
107
Sagittarius – Today's Horoscope!! A day to profit from travel opportunities!

தனுசு – இன்றைய ராசிபலன்! நிதி கிட்டும் நாள்!

தனுசு ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான்.இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு சுப நிகழ்ச்சிகள் நடைபெறும் நாள். நிதி அருமையாக உள்ளது. கணவன் மனைவியிடையே அதி அற்புதமான அன்யூனியம் நிலவுவதால் விருந்து மற்றும் கேளிக்கைகளில் கலந்துகொண்டு மகிழ்வீர்கள். குடும்ப உறுப்பினர்களின் அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்.

 

உத்தியோகத்தில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியடையும். கொடுத்த வாக்குகளை காப்பாற்றி மகிழ்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரம் அருமையாக நடைபெறும். புதிய முதலீடுகளை புகுத்தி மகிழ்வீர்கள். கொடுக்கல் வாங்கல் அதி அற்புதமான பாதையில் செல்லும்.

 

உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு சந்தோஷமான செய்தி காத்திருக்கிறது. குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் கணவனின் அன்பை பெற்று மகிழ்வார்கள்.

 

நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதரர்களின் இல்ல திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். அரசியல்வாதிகள் முன்னேற்றம் அடைவார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வருமான வாய்ப்புகள் உறுதியாகும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வார்கள்.

 

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான மஞ்சள் நிற ஆடை அணிந்து குரு தட்சிணாமூர்த்தி சுவாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக உங்களுக்கு அதி அற்புதமான நாளாக அமையும்.