Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தனுசு- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு குழப்பங்கள் நீங்கும் நாள்!!

தனுசு- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு குழப்பங்கள் நீங்கும் நாள்!!

தனுசு ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கும் நாள். இரண்டு நாட்கள் ஆகவே உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் இருந்ததால் இருந்தீர்கள். தற்போது தெளிவு பெற்று உள்ளீர்கள். குடும்ப உறவு பலப்படும். கணவன் மனைவியிடையே இருந்த சிறு சிறு கருத்து வேறுபாடுகள் விலகி ஒற்றுமையாக செயல்படுவீர்கள். வாழ்க்கைத் துணை வழி உறவினர்கள் உங்களைப் புரிந்து கொண்டு நடப்பார்கள்.

பொருளாதாரம் முன்னேற்றம் கைகொடுக்கும். வருமானம் திருப்திகரமாக அமையும். உத்தியோகத்தில் உங்கள் நீண்ட நாள் சலுகைகள் கிடைக்க வாய்ப்புகள் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரம் வெகு சிறப்பாக அமையும்.

அரசியலில் இருக்கும் அன்பர்கள் எதிர்பார்க்கும் வெற்றிகள் குவிந்து ஒரு முக்கிய பிரபலங்களாக மாறுவார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் அதிகரிக்கும்.

உத்தியோகம் செல்லும் பெண்கள் எடுக்கும் முயற்சிகள் அற்புதமாக செல்லும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் தந்தை வழி உறவினர்கள் மூலம் அனுகூலமும் ஆலோசனைகளும் கிடைக்கப் பெறுவார்கள். உடல் ஆரோக்கியம் வெகு சிறப்பாக அமையும். இன்னல்கள் குறையும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் இருந்து வந்த மந்த நிலை அகன்று சுபிட்சகரமான நிலை உருவாகும். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் உடல் ஆரோக்கியத்தில் இருந்த அந்த குழப்பங்கள் நீங்கி மருத்துவச் செலவுகள் குறைந்து நிம்மதி பெருமூச்சு விடுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் அன்பர்களுக்கு எதிர்பார்த்த காரியங்கள் அருமையாக நடைபெறும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ஆரஞ்சு நிற ஆடை அணிந்து மகாலட்சுமி தாயாரை வணங்கி வழிபட்டு வாருங்கள் இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Exit mobile version