திருமண வரம் தரும் சாய்பாபா ஆலயம்

0
165

மகாராஷ்டிரா மாநிலம் சீரடியில் பிரசித்திபெற்ற சாய்பாபா ஆலயம் அமைந்திருக்கிறது. நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த ஆலயத்திற்கு வந்து செல்கிறார்கள்.

இந்தியா மட்டுமல்லாமல் உலகின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து சாய்பாபா அருளைப் பெற்றுச் செல்கிறார்கள்.

சாய்பாபாவை தேடி வரும் பெரும்பாலான பக்தர்கள் தங்களுக்கு சிறந்த பண்பான வாழ்க்கை துணை வேண்டும் என்ற வேண்டுகோளை தான் முன்வைக்கிறார்கள்.

இந்த சூழ்நிலையில், வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கும் விதத்தில் சாய்பாபா பக்தர்களுக்கு என தனியாக திருமண சேவையை தொடங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.

இதனை ஏற்கும் விதமாக அந்த கோவில் நிர்வாகம் தற்சமயம் புதிதாக பக்தர்கள் வரன் தேடும் விதத்தில் shirdiivivah.com என்ற புதிய சேவையை அறிமுகப்படுத்தியிருக்கிறது.

இந்த இணையதளத்தில் மணமகன், மணமகள், தேடுபவர்கள் தங்களுடைய சுயவிவரம், புகைப்படங்கள் மற்றும் குடும்ப விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என சொல்லப்படுகிறது.

இதற்காக பதிவு செய்வதற்கு இலவச சேவை, பணம் கட்டி வரன் தேடுதல் சேவை என 3 முறைகள் இருக்கின்றன.1 வருட பேக்கேஜ் முறைக்கு 5100 மற்றும் 11,000 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

இதன் மூலமாக, தொடர்புடையவர்களை நேரடியாக தொடர்பு கொண்டு விவரங்களை தேர்ந்தெடுக்கலாம். இணையத்தில் நாள்தோறும் பதிவு செய்யப்படும் அனைத்து சுயவிவரங்கள் சாய்பாபா பாதத்தில் வைத்து பூஜிக்கப்படுகிறது என்று சொல்லப்படுகிறது.

ஏழ்மையான ஜோடிகளுக்கு திருமணத்திற்கான அனைத்து விதமான ஏற்பாடுகளையும் கோவில் நிர்வாகம் செய்யும், அதற்கான செலவுகள் அனைத்தையும் கோவில் நிர்வாகமே ஏற்றுக்கொள்ளும் என்று கோவில் அறக்கட்டளையின் தலைவர் ரோஷன் குமார் தெரிவித்திருக்கிறார்.