Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இதுவரை தமிழ் படங்கள் வெளியாகாத மொழியில் சாய்பல்லவியின் ‘கார்கி’

இதுவரை தமிழ் படங்கள் வெளியாகாத மொழியில் சாய்பல்லவியின் ‘கார்கி’

சாய்பல்லவி நடிப்பில் சமீபத்தில் வெளியான கார்கி திரைப்படம் இன்று ஓடிடியில் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் சாய்பல்லவி  நடிப்பில் வெளியான கார்கி திரைப்படம் மிகப்பெரிய அளவில் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. இந்த படத்தை இயக்குனர் மிஷ்கினின் உதவியாளர் கௌதம் ராமச்சந்திரன் இயக்கியுள்ளார். இந்த படத்தை நடிகர் சூர்யா தன்னுடைய நிறுவனம் சார்பாக வெளியிட்டார். ஜூலை 15 ஆம் தேதி வெளியான் இந்த திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை பற்றி பேசிய இந்த படம் வெகுவாகப் பாராட்டப்பட்டது. குறிப்பாக சாய்பல்லவி மற்றும் காளி வெங்கட் ஆகியோரின் நடிப்பு ரசிகர்களாலும், விமர்சகர்களாலும் வெகுவாக சிலாகிக்கபட்டது. இந்நிலையில் இப்போது கார்கி திரைப்படம் சோனி லிவ் ஓடிடியில் இன்று முதல் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது. திரையரங்குகளில் இந்த படத்தைத் தவறவிட்டவர்கள் ஓடிடியில் காணும் ஆவலோடு காத்திருந்த நிலையில் இப்போது ஓடிடியில் படம் வெளியாகியுள்ளது.

இந்த படத்தின் மற்றொரு சிறப்பம்சமாக கார்கி திரைப்படம் பெங்காலி மொழியிலும் டப் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. வழக்கமாக தமிழ் படங்கள் வட இந்தியாவில் இந்தியில் மட்டுமே டப் செய்யப்படும். ஆனால் முதல் முறையாக கார்கி திரைப்படம் பெங்காலியிலும் டப் செய்யப்பட்டுள்ளது கவனத்தைப் பெற்றுள்ளது.

2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த பிரேமம் என்ற திரைப்படத்தில் நடித்தன் மூலமாக திரையுலகில் மிகவும் பிரபலமானார். அந்த படத்தின் வெற்றி காரணமாக அடுத்தடுத்து தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடித்த விராட பர்வம் திரைப்படத்தில் அவரின் நடிப்பு ரசிகர்களாலும் விமர்சகர்களாலும் பாராட்டப்பட்டது.

Exit mobile version