Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சைமா விருதுகள் 2023 விருது பட்டியல்!!! யார் யாருக்கு என்ன விருது வழங்கப்பட்டது!!?

#image_title

சைமா விருதுகள் 2023 விருது பட்டியல்!!! யார் யாருக்கு என்ன விருது வழங்கப்பட்டது!!?

2022ம் ஆண்டில் வெளியான திரைப்படங்களுக்கான சைமா விருதுகள் வழங்கும் விழா துபாயில் நடைபெற்று வந்தது. அதில் சிறந்த இயக்குநர், சிறந்த நடிகை, சிறந்த நடிகர், சிறந்த இசையமைப்பாளர் போன்ற பல பிரிவுகளில் பல நடிகர் நடிகைகளுக்கு சைமா விருதுகள் வழங்கப்பட்டு உள்ளது. அதன் முழுப் பட்டியல் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

சைமா விருதுகள் 2023 விருதுகள் வழங்கும் விழாவில் நடிகர் கமல்ஹாசன் அவர்கள் சிறந்த பாடகர், பிரபலமான நடிகர் என்ற இரண்டு பிரிவுகளில் விருது வென்றுள்ளார். அதே போல சிறந்த அறிமுக இயக்குநர், சிறந்த நடிகர் லீடிங்க் ரோல் என்ற பிரிவிலும் நடிகர் மாதவன் அவர்கள் இரண்டு விருதுகளை வென்றுள்ளார்.

முழு விருதுப் பட்டியல்

சிறந்த அறிமுக நடிகை – அதிதி சங்கர்(விருமன்)

சிறந்த அறிமுக நடிகர் – பிரதீப் ரங்கநாதன்(லவ் டுடே)

சிறந்த அறிமுக இயக்குநர் – மாதவன்(ராக்கெட்ரி)

சிறந்த இசையமைப்பாளர் – அனிருத்

சிறந்த இயக்குநர் – லோகேஷ் கனகராஜ்(விக்ரம்)

சிறந்த திரைப்படம் – பொன்னியின் செல்வன் 1

சிறந்த ஒளிப்பதிவாளர் – ரவி வர்மன்

அச்சீவ்மென்ட் விருது – மணிரத்னம்

சிறந்த பின்னணி பாடகர் – கமல்ஹாசன்(பத்தல பத்தல)

சிறந்த பின்னணி பாடகி – ஜோனிதா காந்தி

சிறந்த பாப்புலர் சாய்ஸ் நடிகர் – கமல்ஹாசன்(விக்ரம்)

சிறந்த பாப்புலர் சாய்ஸ் நடிகை – திரிஷா(பொன்னியின் செல்வன்1)

சிறந்த நகைச்சுவை நடிகர் – யோகி பாபு

சிறந்த வில்லன் நடிகர் – எஸ்.ஜே சூரியா

சிறந்த சப்போர்டிங் ரோல் நடிகர் – காளி வெங்கட்

சிறந்த சப்போர்ட்டிங் ரோம் நடிகை – வசந்தி(ஏஜென்ட் டினா)

சிறந்த புரொடக்சன் டிசைனர் – தொட்டா தரணி

சிறந்த பாடலாசிரியர் – இளங்கோ கிருஷ்ணன்

சிறந்த நடிகை கிரிடிக்ஸ் – கீர்த்தி சுரேஷ்

சிறந்த நடிகர் லீடிங் ரோல் – மாதவன்

Exit mobile version