தென்னிந்திய திரைப்படங்களில் நடிக்கின்ற நடிகை தான் சாக்ஷி அகர்வால். தமிழ் மட்டுமல்லாது சாக்ஷி அகர்வால் மலையாள திரைப்படங்களிலும் அதிக சப்போர்டிங் கேரக்டரில் நடித்து உள்ளார்.
மேலும், சாக்ஷி அகர்வால் திரைப்படங்கள் மட்டுமல்லாது விளம்பர படங்களிலும் நடித்து இருக்கின்றார். இவர் நூற்றுக்கும் மேற்பட்ட தொலைக்காட்சி விளம்பரங்களிலும் நடித்து உள்ளார்.
அவையாவன, கல்யாண் சில்க்ஸ், ஹெப்ரான் பில்டர்ஸ், சிஎஸ்சி கம்ப்யூட்டர்ஸ், ஏஆர்ஆர்எஸ் சில்க்ஸ், மலபார் கோல்டு, பட்டுஷாஸ்திரா, ஏர்ஏசியா, சக்தி மசாலா போன்றவை ஆகும். 2018-ம் ஆண்டில் கோலிவுட் திரையுலகில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த காலா திரைப்படத்தில் நடித்து புகழ் பெற்றார்.
இதற்கு முன், சாக்ஷி நிறைய திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் கூட காலா படத்திற்கு பின் தான் அனைவராலும் கவனிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து, அஜித்தின் விஸ்வாசம் படத்தில் நயன்தாராவின் உதவியாளரான டாக்டர் கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார்.
இதனையடுத்து இவர் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று மிகவும் பிரபலமானார். மேலும், வெளியில் வந்த பின்பு தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களைக் கவர்ந்து வந்தார்.
சாக்ஷியின் புகைப்படம் மற்றும் விடியோ ஆகியன மிகவும் வைரல் ஆகி வந்தது. இந்த நிலையில் இவர் தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் டிரெடிஷனல் உடையில் உள்ளார்.