சீனாவின் மொழி தந்திரம் குறித்து இந்த செய்திதொகுப்பில் காண்போம்.
சீனா மொழி நேபாளத்தில் கட்டாயப் பாடம் ஆகி உள்ளது, சீன மொழியின் மாண்டரினை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கும் என அறிவித்துள்ளது . வட மேற்கு மற்றும் தென்மேற்கு சீனாவில் பல மக்கள் சீன மொழிகளில் பழமையான ஒன்றான மாண்டரின் மொழியை பொதுவாக பயன்படுத்தி வருகின்றனர்.
இவ்விரண்டு மொழிக்கும்(சீனா மொழி vs மாண்டரின்) வித்தியாசம் மிக மிக குறைவு தான். சீனாவில் உள்ள பீஜிங் மற்றும் ஷங்காய் நகர மக்கள் பலர் இந்த மாண்டரின் மொழியை பேசி வருகின்றனர். சிங்கப்பூர் மற்றும் தைவான் நாடுகளிலும் இந்த மாண்டரின் மொழி பேசப்படுகிறது.
நேபாள நாடு சீனாவுக்கு பல விதமாக தங்களது ஆதரவுகளை தெரிவித்து வருகிறது. சீனா தற்போது அமைத்து வரும் பொருளாதார சாலைக்கு நேபாள அரசு ஆதரவு கரத்தை நீட்டியுள்ளது. இந்த பொருளாதார சாலை திட்டத்தினால் இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் இந்த திட்டத்தை இந்தியா அரசு எதிர்த்தது.
தற்போது சீன அரசு இந்த மாண்ட்ரின் மொழியை கற்பிக்கும் நேபாள ஆசிரியர்களுக்கு சீன அரசு ஊதியம் வழங்க உள்ளதாக அறிவித்தது. இதனால் நேபாளத்தில் பல பள்ளிகளில் மாண்டரின் மொழி கட்டாயப் பாடமாக்கபட்டுள்ளது. நேபாள் நாட்டு கல்வி அமைச்சகம் வழிமுறையின் படி, நேபாள பள்ளிகளின் விதிமுறைகளின் படி, வெளிநாட்டு மொழிகளை கற்பிக்க அனுமதி உண்டு. ஆனால் எந்த ஒரு வெளிநாட்டு மொழியையும் கட்டாயப் பாடமாக கூடாது.
மாண்டரின் மொழியை கற்பிக்கும் ஆசிரியர்களின் ஊதியத்தை சீன அரசு அளிக்க முன்வந்ததால் நேபாளப் பள்ளிகள் மாண்டரின் மொழியை கட்டாயப் பாடமாக்கி உள்ளது. நேபாள நாட்டில் இதுவரை வெளிநாட்டு மொழிகள் பள்ளி நேரம் முடிந்த பிறகே கற்பிக்கப்பட்டு வந்தன. ஆனால் தற்போதைய நிலையில் மாண்டரின் மொழி பாட நேரத்தில் கற்பிக்கப்படுகிறது.நேபாள அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளதாக நேபாள ஊடகங்கள் தெரிவிக்கின்றன.