பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பணியாளர்கள் இணைந்த ஜாக்டோ ஜூடோ அமைப்பானது இன்று போராட்டம் நடத்துவதாக அறிவுத்திறந்த நிலையில் போராட்டத்தில் கலந்து கொள்ளக்கூடிய ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் உடைய சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இவர்களுடைய போராட்டமானது ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இவர்களுடைய போராட்டம் நடத்தப்படக் கூடாது என நேரடியாக தமிழக அரசு தெரிவிக்காமல் மறைமுகமாக தெரிவிப்பது போல் போராட்டத்தில் ஈடுபடக் கூடியவர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என தெரிவித்திருக்கிறது. அதிலும் குறிப்பாக காலை 10.15 மணிக்குள் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் தங்களுடைய பணிக்கு சென்று விட வேண்டும் என்றும் அதன் பிறகு செல்பவர்களுக்கும் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
மேலும் இன்று மருத்துவ விடுப்பு தவிர வேறு ஏதேனும் காரணங்களுக்காக விடுப்புகள் கோரப்பட்டாலும் வழங்கப்பட மாட்டாது என்றும் கட்டாயமாக சம்பளப்படுத்தம் செய்யப்படும் என்றும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் இணைந்த ஜாக்டோ ஜூடோ அமைப்பிற்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
திமுக அரசானது தங்கள் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம் என தெரிவித்த நிலையில் ஆட்சிக்கு வந்த 4 வருடங்கள் நிறைவடையுள்ள நிலையில் இன்றுவரை இது குறித்த எந்த முடிவுகளும் எடுக்கப்படவில்லை என்பதால் இதனை எதிர்த்து அரசு ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்து இருக்கின்றனர்.