Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

காசு பணம் துட்டு நிறைய மணி மணி மணி! மத்திய அரசு ஊழியர்களுக்கு வெளியான குதூகல அறிவிப்பு!

இதுவரையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 31 சதவீதமாக இருந்த சூழ்நிலையில், அது 34 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது இதற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவை வழங்கியிருக்கிறது. ஜனவரி மாதம் 1-ஆம் தேதி முதல் அகவிலைப்படி உயர்வு அமல்படுத்தப்படவுள்ளது. இதன் மூலமாக, சுமார் 46.67 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 68. 82 லட்சம் ஓய்வூதியம் பெறுபவர்கள் பயன்பெறுவார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த அகவிலைப்படி உயர்வு காரணமாக, மத்திய அரசுக்கு கூடுதலாக 9,544.50 கோடி ரூபாய் செலவாகும். அகவிலைப்படி என்பது பணவீக்கத்தை சமாளிப்பதற்காக அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் தொகை ஆண்டுக்கு ஜனவரி ,ஜூலை, என 2 முறை அகவிலைப்படி உயர்த்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த அகவிலைப்படி என்பது அடிப்படை ஊதியத்தை வைத்து கணக்கிடப்படுகிறது. உதாரணமாக ஒரு ஜூனியர் மத்திய அரசு ஊழியரின் அடிப்படை சம்பளம் 18000 ரூபாய் என வைத்துக்கொண்டால் அதில் முந்தைய அகவிலைப்படி 31 சதவீதம் என்றால் 5,580 ரூபாய்.

தற்சமயம் அகவிலைப்படி 34 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது இனி அதே அரசு ஊழியருக்கு அகவிலைப்படி 6,120 ரூபாய் கிடைக்கும் அதாவது அவருக்கு அகவிலைப்படி 540 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

Exit mobile version