Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்த ஆசிரியர்களுக்கு மட்டும் தொகுப்பூதியம் உயர்வு! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!

Salary increase for these teachers only! Action order issued by the government!

Salary increase for these teachers only! Action order issued by the government!

இந்த ஆசிரியர்களுக்கு மட்டும் தொகுப்பூதியம் உயர்வு! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவலின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது. மேலும் அப்போது பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாகவே மாணவர்களுக்கு வகுப்பு நடத்தப்பட்டது.மேலும் கடந்த 2௦22 ஆம் ஆண்டு கொரோனா பரவல் குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நேரடி வகுப்பு தொடங்கப்பட்டது.

தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை  வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பை தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் தற்காலிக ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியத்தை உயர்த்தி வழங்கப்படும். அந்த வகையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கான தொகுப்பு ஊதியம்  12 ஆயிரம் ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியம் ரூ 15 ஆயிரமாக  உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தொகுப்பு ஊதியம் ரூ.18,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர்  மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளில் தற்போது வரை 221 ஆசிரியர்கள் பணி புரிந்து வருகின்றனர்.

அதனை தொடர்ந்து புதிதாக 144 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் 415 தற்காலிக  ஆசிரியர்களுக்கான தொகுப்பு ஊதியம்  வழங்கப்படும் எனவும் அந்த அரசானையில் கூறப்பட்டுள்ளது. மேலும் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப் படியை  உயர்த்தி வழங்கும் அறிவிப்பை விரைவில்  வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Exit mobile version