நாளை முதல் ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!!

0
87

நாளை முதல் ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!!

 

நாளை முதல் அதாவது ஜூலை 12ம் தேதி முதல் தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக தக்காளி விற்பனை செய்யப்படும் என்று தமிழக அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

 

தமிழகத்தில் தக்காளியின் விலை நாளுக்கு நாள் அதிகரிக்கும் தங்கத்தின் விலை போல அதிகரித்துக் கொண்டு இருக்கின்றது. தக்காளி மட்டுமில்லாமல் அத்தியிவசிய காய்கறிகளின் விலையும் அதிகரித்துக் கொண்டு இருக்கின்றது. தமிழகத்தில் மட்டும் தான் இந்த நிலைமை என்றால் இல்லை. மற்ற மாநிலங்களிலும் ஏன் இந்தியா முழுவதிலும் தக்காளியின் விலை அதிகரித்துக் கொண்டு செல்கின்றது.

 

நாட்டில் தக்காளி விளைவிக்கும் விவசாயிகள் தக்காளிக்கு இன்சூரன்ஸ் எடுத்து வைக்கும் நிலைக்கு தக்காளியின் விலை அதிகரித்துள்ளது. மேலும் தக்காளி திருடு போகாமல் இருக்க தக்காளியின் பாதுகாப்பிற்காக பவுன்ஸ்சர்களையும் விவசாயிகள் நியமித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் அதிகரிக்கும் தக்காளி விலைமின் எதிரொளியாக மக்களின் தக்காளி தேவையை பூர்த்தி செய்வதற்காக தமிழக அரசு ரேஷன் கடைகளின் மூலமாக தக்காளியை ஒரு கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்யும் திட்டத்தை அறிமுகப்படுத்தி முதல் கட்டமாக சென்னையில் உள்ள 82 ரேஷன் கடைகளில் இதை அறிமுகப்படுத்தியது.

 

மேலும் முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் ரேஷன் கடைகள் மூலமாக தக்காளி விற்பனை திட்டத்தை விரிவுபடுத்துவது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நாளை முதல் அதாவது ஜூலை 12ம் தேதி முதல் தமகழகத்தில் மேலும் 300 ரேஷன் கடைகள் மூலமாக தக்காளி விற்பனையை அறிமுகப்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

 

இதன் மூலமாக தமிழகத்தில் 300 ரேஷன் கடைகள் மூலமாக நகரப் பகுதிகளில் தக்காளி விற்பனையை விரிவுபடுத்தப்படும் என்றும் நடமாடும் காய்கறி விற்பனை அங்காடி மூலமாக காய்கறிகள் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படும் என்றும் தமிழக கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளது.