சேலம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு! விடுதிகளின் பதிவை உறுதி செய்ய கடைசி தேதி வெளியானது!
சேலம் மாவட்டம் ஆட்சியர் கார்மேகம் நேற்று அந்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அந்த அறிவிப்பில் சேலம் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் விடுதிகள் செயல்பட்டு வருகிறது. மேலும் தனியார் பணி புரியும் மகளிர் விடுதி மற்றும் இல்லமும் செயல்பட்டு வருகிறது. அவைகள் அனைத்தும் தமிழ்நாடு ஹாஸ்டல் அட் ஹோம்ஸ் ஃபார் வுமன் அண்ட் சில்ட்ரன் ஏ சி டி 2014 கீழ் கட்டாயம் பதிவு செய்திருக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார் .
மேலும் அவ்வாறு பதிவு செய்யப்படாத விடுதிகள் மற்றும் இல்லங்கள் பதிவு செய்வதற்காக htps://inswp.com என்ற இணையதள லிங்கின் மூலம் அறக்கட்டளை பதிவு பத்திரம் ,சொந்த கட்டிடம் மற்றும் வாடகை ஒப்பந்த பத்திரம், கட்டிட வரைபடம், கட்டிட உறுதிச் சான்று மற்றும் தீயணைப்பு துறையின் தடையில்லா சான்று ,சுகாதாரச் சான்று உள்ளிட்ட ஆவணங்களுடன் பதிவு செய்ய வேண்டும் எனவும் கூறப்படுகிறது.
மேலும் விடுதி நிர்வாகிகள் தங்களது விடுதி மற்றும் இல்லங்களை பதிவு செய்திட மேலே கூறப்பட்ட ஆவணகள்வுடன் இணையதள லிங்க் மூலம் இம்மாதம் 30 ஆம் -தேதி மாலை 6 மணிக்குள் பதிவு செய்திருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது. மேலும் முறையாக பதிவு செய்யப்படாத தனியார் விடுதி மற்றும் இல்ல நிர்வாகிகளின் மீது காவல்துறையின் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வழக்கு பதிவு செய்த செய்யப்படும் எனவும் அந்த அறிவிப்பில் கூறியிருந்தார். மேலும் அவர்களுக்கு அதிகபட்சமாக 2 ஆண்டுகள் சிறை தண்டியும் ரூ 50,000 அபராதமும் விதிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுயிருந்தார்.