Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு! இரவு நேரம் வந்தாலே  இதையெல்லாம் செய்யனுமாம்! நீதி கேட்ட கல்லூரி மாணவிகள்!

Another Jaybeam to host in Salem! Chief's Action Order!

Another Jaybeam to host in Salem! Chief's Action Order!

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு! இரவு நேரம் வந்தாலே  இதையெல்லாம் செய்யனுமாம்! நீதி கேட்ட கல்லூரி மாணவிகள்!

சில வருடங்களுக்கு முன்புதான் கல்லூரிகளில் ராகிங் என்ற பிரச்சனை பெருவாரியாக பேசப்பட்டது. முதலாமாண்டு சேரும் மாணவர்களை மூன்றாம் ஆண்டு மாணவர்கள் ராகிங் செய்வது வழக்கமாக கொண்டு. இந்த ராகிங் மூலம் பல துயரமான சம்பவம் அரங்கேறியது இவ்வாறு மாணவர்கள் கல்லூரி மற்றும் வெளி இடங்களில் செய்வதற்கு தடை விதித்தனர். அவ்வாறு செய்பவர்களுக்கு தக்க தண்டனை வழங்கப்படும் என்றும் கூறினர். அந்த வகையில் தற்பொழுது பெரும்பான்மையான கல்லூரிகளில் ராகிங் என்ற பேச்சுக்கு இடமில்லாது காணப்பட்டது. மாணவர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் இணைந்து பாசப் பிணைப்புடனே காணப்படுகின்றனர். இருப்பினும் ஒரு சில இடங்களில் இந்த ராக்கிங் என்னும் பிரச்சினை தொடர்ந்த வண்ணமாக தான் உள்ளது.

அந்த வகையில் சேலத்தில் இதுபோன்ற ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது.சேலம் சங்கர் என்ற பகுதியில் பழங்குடியினர் மற்றும் ஆதிதிராவிடர் பெண்கள் விடுதி ஒன்று உள்ளது.விடுதியில் தற்போதுவரை 150 பெண்கள் தங்கி வருகின்றனர். அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் தான் அந்த விடுதியில் தங்கி வருகின்றனர். அந்த வகையில் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவர்கள் விடுதியில் தற்பொழுது வந்து சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர்களை தினந்தோறும் ராகிங் செய்து வந்துள்ளனர். முதலாமாண்டு பெண்கள் சிறிது நாட்கள் பொறுத்துப் பார்த்து உள்ளனர். அந்த மூன்றாம் ஆண்டு மாணவிகள் அத்துமீறி நடக்க ஆரம்பித்தால் நியாயம் கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நாடினர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று தங்களுக்கு ஏற்பட்ட ராகிங் சம்பந்தமான பிரச்சனைகளை கூறினர். இரவு நேரங்களில் எங்களை பாட்டு பாடு சொல்லியும் நடனமாடும் சொல்லியும் தொடர்ந்து எங்களது சீனியர்கள் ராக்கிங் செய்து வருவதாக கூறியுள்ளனர்.

அதுமட்டுமின்றி அவர்களது முன்னிலையில் செல்போன் உபயோகிக்க கூடாது என்றும் அவ்வாறு உபயோகித்தால் செல்போனை உடைத்த விடுவோம் என்று மிரட்டி வருவதாகவும் பெண்மணிகள் கூறியுள்ளனர்.அதனால் இப்பிரச்சனைக்கு எல்லாம் நிரந்தரத் தீர்வு வாங்கி தருமாறு மாவட்ட ஆட்சியரிடம் கேட்டுள்ளனர்.இந்த புகாரை உடனே எடுத்துக் கொண்டு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அலுவலர் சரளா மற்றும் சில அதிகாரிகள் உடன் அந்த விடுதிக்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் ராகிங் செய்ததாக கூறிய பெண்களை அழைத்து தனித்தனியே விசாரித்து வந்துள்ளனர்.விசாரணை முடிந்ததையடுத்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அலுவலர் சரளா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். ராகிங் செய்ததாக வந்த புகாரை உடனடியாக எடுத்து விசாரணை நடத்தினோம். அந்த மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு அறிவுரை கூறி உள்ளதாக தெரிவித்தார். மேலும் இது குறித்து புகார்கள் மீண்டும் வரக்கூடாது என்றும் எச்சரித்து தாக அலுவலர் சரளா கூறினார்.

Exit mobile version