Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சேலம் மாவட்டத்தில் ஆசிரியருக்கு நேர்ந்த கொடுமை! குறுஞ்செய்தி மூலம் நூதன திருட்டு!

Salem District Teacher's Cruelty! Nudana theft by text message!

Salem District Teacher's Cruelty! Nudana theft by text message!

சேலம் மாவட்டத்தில் ஆசிரியருக்கு நேர்ந்த கொடுமை! குறுஞ்செய்தி மூலம் நூதன திருட்டு!

சேலம் மாவட்டம் எடப்பாடி தாவாந்தெருவைச் சேர்ந்தவர் லதா (38).  இவர் ஈரோடு மாவட்டம் கண்ணாமூச்சி அரசு பள்ளியில்  ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர்  தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் கணக்கு வைத்திருந்தார். நேற்று வீட்டில் இருந்த லதாவின் செல்போன் எண்னிற்கு குறுஞ்செய்தி ஒன்று வந்தது.

அந்த குறுஞ்செய்தியில் வங்கி கணக்குடன் பான் கார்டு எண்ணை உடனடியாக இணைக்கும் மாறும் அவ்வாறு இணைக்காவிட்டால் வங்கி கணக்கு மூடப்படும் எனவும் அனுப்பப்பட்டிருந்தது.இதனையடுத்து அந்த குறுஞ்செய்தி உடன் வந்த லிங்க் மூலம் தனது வங்கி கணக்குடன் பான் கார்டு எண்ணை லதா இணைத்தார்.

இந்நிலையில் சில நொடிகளிலேயே லதாவின் வங்கி கணக்கில் இருந்து ரூ.25,000 எடுக்கப்பட்டதாக மீண்டும் குறுஞ்செய்தி வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த லதா உடனடியாக அந்த வங்கி கணக்கில் இருந்து மீதி பணத்தை தனது உறவினரின் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்துள்ளார்.

இதனால் வங்கியில்  மீதம் இருந்த தொகை பாதுகாக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து எடப்பாடி போலீசார்ருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் எடப்பாடி போலீசார் லதாவிற்கு ஆலோசனை கொடுத்தார்கள். அந்த ஆலோசனையின் பேரில்  சேலம் மாவட்டம் சைபர் கிரைம் போலீசில் லதா புகார் அளித்தார்.

அந்த புகாரின் பேரில் சேலம் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு குறுஞ்செய்தியின் மூலம் பணம் திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version