சேலம் இன்ஜினீயரிங் மாணவி அசத்தல்! ரூ.10 லட்சம் ஊதியத்தில் இன்போசிஸ் நிறுவனத்தில் பணி!
ராசிபுரம் முத்தாயம்மாள் பொறியியல் கல்லூரியில் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். பொறியியல் கல்லூரியில் மாணவர்கள் அனைவரும் வேலைவாய்ப்பு நிறுவனங்களில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையத்தில் விவசாய குடும்பத்தை சேர்ந்தவள் ஆர்.அபிராமி. கல்லூரியில் எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் துறையில் இரண்டாம் ஆண்டு பயின்று வரும் மாணவி ஆர். அபிராமியும் கலந்து கொண்டாள்.
இன்போசிஸ் நிறுவனத்தின் வேலைவாய்ப்பு மட்டுமில்லாமல் உதவித்தொகையும் வழங்கினர். பிளஸ் 2 முடித்த பின் திறமைமிக்க பொறியாளராக உருவாக வேண்டும் என்ற எண்ணத்தில் இக்கல்லூரியை தேர்ந்துதேடுத்தேன். முதலாம் ஆண்டு முதல் இறுதியாண்டு வரை கல்லூரியில் அளிக்கப்பட்ட பயிற்சி மற்றும் திறமைகளை வளர்த்துக் கொண்டு உறுதுணையாக இருந்தேன். வேலைவாய்ப்பு திறன்களை வளர்த்துக் கொள்வதற்கு கல்லூரியின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் ஆசிரியரின் தேவையான பயிற்சிகளை அளித்தார்கள். இதனால் இன்போசிஸ் நிறுவனத்தின் மூலம் அளிக்கப்பட்ட மாதிரி நேர்காணல் பயிற்சியில் தேர்வுகளை எளிதாக எதிர்கொள்ள முடிந்தது.
இந்த ஆண்டு கல்லூரி வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் மூலம் இன்போசிஸ் நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ 10 லட்சம் ஊதியத்தில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளார். இன்போசிஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு பெற்ற மாணவிக்கு துணைத்தலைவர் பேராசிரியர்கள் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் பயிற்சியாளர் ஆகியோரும் ராசிபுரம் முத்தாயம்மாள் எஜீகேஷனல் டிரஸ்ட் மற்றும் ரிசர்ச் பவுண்டேஷன் ஆர். கந்தசாமி, செயலாளர் கே.குணசேகரன், இணைச்செயலாளர் பொறியாளர் ஜி.ராகுல், கல்லூரி முதல்வர் எம்.மாதேஸ்வரன் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.