Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பல பெண்களிடம் உல்லாசம் ; 50 லட்சம் மோசடி செய்த கில்மா பார்ட்டி கைது ; சேலத்தில் பரபரப்பு சம்பவம்!

பல பெண்களிடம் உல்லாசம் ; 50 லட்சம் மோசடி செய்த கில்மா பார்ட்டி கைது ; சேலத்தில் பரபரப்பு சம்பவம்!

சேலம் மாவட்டம் அம்மாபாளையத்தை சேர்ந்த டேவிட் என்பவர் மீது தனக்கு வேலை தருவதாக கூறி வாங்கிய 4.25 லட்சம் பணத்தை திருப்பி தராமல் பணமோசடி செய்ததாக சேலம் அம்மாபேட்டையைச் சேர்ந்த அஸ்ரப் அலி என்பவர் சூரமங்கலம் காவல்துறையில் புகார் கொடுத்திருந்தார்.

இன்ஜினியரிங் படிப்பு முடித்த அஸ்ரப் அலி வேலை தேடி பெங்களூர் தனியார் நிறுவனத்தின் நேர்முகத் தேர்வுக்கு சென்று திரும்பிய போது பேருந்தில் உடன் பயணித்த டேவிட் என்ற என்பவருடன் தொடர்பு ஏற்பட்டு வேலை நிமித்தமாக இருவரும் தொடர்ந்து பேசிவந்த சூழலில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ஆசைகாட்டி நான்கு லட்சத்திற்கும் மேற்பட்ட பணத்தை டேவிட் திட்டமிட்டு வாங்கியுள்ளார்.

பணம் வாங்கி பல நாட்களாகியும் வேலை வாங்கி தரவில்லை, பணத்தையும் திருப்பி தராத காரணத்தால் காவல்துறையின் புகாரின் அடிப்படையில் விசாரணை தொடங்கியது விசாரணைக்கு பின்பு பல அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரசுவேலை, வெளிநாட்டு வேலை வாங்கிக் கொடுக்க மேல்மட்டத்தில் ஆள் இருப்பதாக கூறி 5 ஆண்டுகளில் மட்டும் 62 நபர்களிடம் ஐம்பது லட்சத்திற்கும் மேற்பட்ட பணமோசடி செய்தது தெரிய வந்தது. மேலும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பல பெண்களை திருமணம் செய்து ஏமாற்றியதும், கள்ளக்காதலிகள் இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மோசடி செய்த பணத்தை மனைவியர் மற்றும் கள்ளக்காதலிகளிடம் கொடுத்து உல்லாச வாழ்க்கை நடத்தியதை காவல்துறைக்கு கொடுத்த வாக்குமூலத்தில் மாற்றுத்திறனாளி டேவிட் தெரிவித்துள்ளான். இச்சம்பவம் காவல்துறை மற்றும் பணம் கொடுத்து ஏமாந்தவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version