சேலம் அரசு மருத்துவமனை செவிலியர்கள் போராட்டம் !!

0
147

சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் செவிலியர்கள் தங்கியுள்ள விடுதிகளில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, சேலம் அரசு பொது மருத்துவமனை சிகிச்சை பிரிவில் செவிலியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் அரசு பொது மருத்துவமனையில் 600 படுக்கையில் வசதியுடன் கொரோனா சிகிச்சை பிரிவு இயங்கி வருகிறது .அதில் 600 செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் சுழற்சி முறையில் பணிபுரிந்து வருகின்றனர். மருத்துவனையில் பணிபுரியும் செவிலியர்கள் பணி முடிந்த பின்னர், வீடுகளுக்கு செல்லாமல் விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், செவிலியர்களை தங்கியுள்ள விடுதிகளில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படவில்லை எனக் குற்றம் சாட்டியுள்ளனர்.மேலும், கொரோனா பிரிவில் பணிபுரியும் செவிலியர்களுக்கு கூடுதலாக செவிலியர்களை நியமிக்க வேண்டுமென்றும் , நோயளிகளுக்கு குறிப்பிட்ட நேரத்தில் உணவு வழங்கப்பட வேண்டும் என்றும், வலியுறுத்தி செவிலியர்கள் நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த பொது மருத்துவமனை டீன் பாலாஜிநாதன், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்பு ,கோரிக்கைகளை நிறைவேற்றும் படியும், நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தன் பின்னர், செவிலியர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

செவிலியர்கள் தாமதமாக கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளித்தனர்.இதனால் சில மணி நேரம் நோயாளிகள் பாதிக்கப்பட்டிருந்தனர்.