Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சேலம் | பட்டியலினத்தவரை அனுமதிக்க முடியாது! இருதரப்பு மோதல், தீ வைப்பு, பதற்றம், போலீஸ் குவிப்பு!

சேலம் | பட்டியலினத்தவரை அனுமதிக்க முடியாது! இருதரப்பு மோதல், தீ வைப்பு, பதற்றம், போலீஸ் குவிப்பு!

omalur temple clash

சேலம் அருகே கோவில் திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதால், பெரும் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.

சேலம் மாவட்டம், ஓமலூர் அடுத்த தீவட்டிப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவின்போது, இருதரப்பினர் மோதல் காரணமாக திருவிழா நிறுத்தப்பட்டு, போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

பட்டியல் இன மக்களை கோவிலுக்குள் அனுமதிக்க ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக இரு தரப்பினர் இடையே மோதல் வெடித்துள்ளது.

இந்த இருதரப்பினர் இடையான மோதலின் போது பேக்கரி கடை ஒன்றுக்கு தீ வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த

இரு தரப்பினரையும் அழைத்து இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இந்த பேச்சுவார்த்தையின் போது பட்டியலின மக்களை கோவிலுக்குள் அனுமதிக்க ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதன் காரணமாக தீவட்டிப்பட்டி மாரியம்மன் கோவில் பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. பதட்டத்தை தணிக்கவும், மீண்டும் மோதல் ஏற்படாத வகையில் அமைதியை நிலை நாட்டவும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் பேக்கரி கடை கொளுத்தப்பட்டது சம்பந்தமாகவும், மோதலில் ஈடுபட்டவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து, கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் இறங்கி உள்ளனர்.

இதற்கிடையே வந்தவாசி அருகே திரௌபதி அம்மன் கோயிலில் அக்னி வசந்த விழாவை முன்னிட்டு துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி சிறப்பாக நடந்து முடிந்துள்ளது.

இந்த திருவிழாவின் ஒரு நிகழ்வாக காந்தாரி வேடம் அணிந்தவர் துடைப்பம், முறத்தால் பக்தர்களை துரத்தி துரத்தி அடித்த சுவாரஸ்ய நிகழ்வும் அரங்கேறியது.

Exit mobile version