சேலம் போலீசார்க்கு தலா ரூ 50 ஆயிரம் அபராதம்! மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு!

0
170
Salem police fined Rs 50,000 each! State Human Rights Commission order!

சேலம் போலீசார்க்கு தலா ரூ 50 ஆயிரம் அபராதம்! மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு!

சேலத்தை சேர்ந்தவர் பரமேஸ்வரி இவருடைய கணவர் முத்துசாமி. இவர்கள் இருவரையும் கடந்த 2019ஆம் ஆண்டு சேலம் கிச்சிப்பாளையம் காவல் நிலையத்தில் வைத்து மனித உரிமைகளை மீறி தாக்கியுள்ளனர். அதனையடுத்து பரமேஸ்வரி  மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்தார்.அந்த புகாரின் அடிப்படையில் அந்த வலக்கை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சர்ஜத் நயினாமுகமது மற்றும் சங்கர் ,மஞ்சுளா ஆகியோர் விசாரணை நடத்தி வந்தனர்.

மேலும் அந்த வழக்கை ஆய்வு செய்த பின் மனித உரிமை ஆணையத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பில் சேலம் காவல் துறை உதவி ஆணையராக பதவி வகித்து வரும் நாகராஜ் மற்றும் உதவி ஆய்வாளர் சின்னசாமி ஆகியோர்க்கு தலா ரூ 25 ஆயிரம் அபராதம் விவிதித்து மாநில மனித உரிமை ஆணையம் தீர்பளித்தது.

இதனைத்தொடர்ந்து அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் ,உள்துறைச் செயலாளர் ஆகிய இருவரும் பரமேஸ்வரிக்கு ரூ 50ஆயிரம் இழப்பீடாக உத்தரவு பெறப்பட்ட பிறகு நான்கு வாரங்களுக்குள் வழங்க வேண்டும் என்றும் ,பணம் செலுத்திய பிறகு தமிழ்நாடு அரசு பதிலளித்த இருவரிடமிருந்து தலா ரூ 25 ஆயிரம் திரும்ப பெறலாம் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.