கூட்டுறவு துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் விற்பனையாளர் பணி!! இன்றும் நாளையும் நடைபெறும் நேர்முகத்தேர்வு!!

0
65

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் விற்பனையாளர் மற்றும் கட்டுதல் பணிக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்து வந்த நிலையில், தற்பொழுது இன்று மற்றும் நாளை ஆகிய இரு நாட்கள் மீண்டும் நேர்முக தேர்வு நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

 

குமரி மாவட்டத்தில் மொத்தம் 35 விற்பனையாளர், 6 கட்டுனர் என்று மொத்தம் 41 காலி பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.இதில் விற்பனையாளர் பணிக்கு 5 ஆயிரத்து 200 பேரும், கட்டுனர் பணிக்கு 789 பேரும் என்று மொத்தம் 5 ஆயிரத்து 989 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதற்கான நேர்முக தேர்வு நாகர்கோவில் மாடரேட்டர் ஞானதாசன் பாலிடெக்னிக் கல்லூரியில் கடந்த நவம்பர் மாதம் 25ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

 

இந்த நேர்முகத் தேர்வில் ஒரு நாளைக்கு 1000 பேர் என்ற விகிதத்தில் இவற்றை இரண்டாக பிரித்து மாலை 500 மற்றும் காலை 500 என பகுதியாக பிரிக்கப்பட்டு நேர்முகத் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.கடந்த 2 நாட்களாக விடுமுறை என்ற நிலையில் விடுமுறைக்கு பின்னர் மீண்டும் இன்றும், நாளையும் நேர்முக தேர்வு தொடர்ந்து நடைபெற இருக்கிறது என்று அதிகாரிகள் திரும்பத் இருப்பது குறிப்பிடத்தக்கது.