Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தமிழ் படங்களை தவிர்க்கும் சமந்தா? அவரே கூறிய காரணம்

samantha

samantha

பானா காத்தாடி முதல் தமிழ் படங்களில் அறிமுகமான சமந்தா(Samantha Ruth Prabhu) கடைசியாக காத்து வாக்குல இரண்டு காதல் என்ற தமிழ் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்தார். ஆனால் அதன் பிறகு தமிழ் படங்களில் அவர் நடிக்கவே இல்லை.

கடந்த வருடத்தில் நிறைய சோதனைகளை சந்தித்த சமந்தாவை பற்றி இணையதளத்தில் பல விஷயங்கள் பரவிக்கொண்டிருந்தது. அனைவரும் சமந்தாவுக்கு ஆதரவாக தான் பேசிக் கொண்டிருந்தனர். என்னதான் சமீப காலமாக இவர் தமிழ் படங்களில் நடிக்கவில்லை என்றாலும் தமிழ் ரசிகர்கள் இவருக்கு ஏராளமாகவே உள்ளனர்.

அண்மையில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய சமந்தாவிடம் ஏன் தமிழ் படங்களில் நடிப்பதில்லை என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு, சமந்தா, “நான் ஒரு நடிகையாக மனதிற்கு நிறைவாக இருக்கக்கூடிய படங்களில் மட்டுமே நடிக்க விரும்புகிறேன்.

அனைத்து படங்களிலும் நடிப்பது மிகவும் எளிமையானது ஆனால் மனதிற்கு நிறைவு தரக்கூடிய ஒரு வலிமையான கதாபாத்திரத்தில் நடிப்பது மிகவும் கடினம் நான் அதையே தேர்வு செய்ய விரும்புகிறேன். அதைத் தவிர கிடைக்கின்ற அனைத்து படங்களிலும் நான் நடிக்க விரும்பவில்லை என்று கூறியிருந்தார்.”

Exit mobile version