உடல் நலப் பிரச்சனை குறித்து முதல் முறையாக பதிவிட்ட சமந்தா… ரசிகர்கள் நம்பிக்கை வார்த்தை!

0
179

உடல் நலப் பிரச்சனை குறித்து முதல் முறையாக பதிவிட்ட சமந்தா… ரசிகர்கள் நம்பிக்கை வார்த்தை!

நடிகை சமந்தா சமீபகாலமாக சில உடல்நல பிரச்சனைகள் காரனமாக பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகின.

விவாகரத்துக்குப் பிறகு தொடர்ந்து படங்களில் கவனம் செலுத்திய சமந்தா கவர்ச்சியான வேடங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்தார். இப்போது அவர் நடிப்பில் யசோதா மற்றும் ஷகுந்தலம் ஆகிய படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன.

அதே போல சமூகவலைதளங்களிலும் அவர் கவர்ச்சியான புகைப்படங்களை அதிகளவில் பகிர்ந்து வந்தார். இப்படி சமூகவலைதளங்களில் தொடர்ந்து ஆர்வமாக இயங்கி வந்த சமந்தா திடீரென்று தன்னுடைய புகைப்படங்கள் எதையும் பதிவேற்றவில்லை. இந்நிலையில் அவருக்கு ஏற்கனவே தோல் சம்மந்தமாக சில பிரச்சனைகள் இருந்த நிலையில் இப்போதும் அந்த பிரச்சனையால்தான் சோஷியல் மீடியாவில் புகைப்படங்களைப் பதிவேற்ற வில்லை என்று வதந்திகள் கிளம்பியுள்ளன.

இந்நிலையில் இப்போது சமந்தா தனக்கு ஏற்பட்ட மையோட்டிஸிஸ் என்ற உடல்நலப் பிரச்சனை குறித்து பகிர்ந்துள்ளார். அதில் “கடந்த சில மாதங்களாக நான் மையோட்டிசிஸ் எனும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவு பிரச்சனையால் பாதிக்கப்பட்டேன். இதில் இருந்து முழுவதும் மீண்டதும் இதை அறிவிக்கலாம் என இருந்தேன். ஆனால் நாம் நினைத்ததை விட இது அதிக காலம் எடுத்துக் கொள்கிறது.

எனது மருத்துவர்கள் நான் முழுமையாக குணமாகிவிடுவேன் என்பதில் உறுதியாக இருக்கிறேன். உங்கள் அன்புதான் இந்த கடினமான நாட்களைக் கடந்து வர உதவுகிறது. குணமாவதற்கு வெகு அருகில் இருப்பதாக நான் உணர்கிறேன். இதுவும் கடந்து போகும்” எனக் கூறியுள்ளார்.