அஜித் 62 படத்தில் ஹீரோயின் நயன்தாரா இல்லையா? விக்னேஷ் சிவனின் திடீர் முடிவு?
அஜித் நடிப்பில் அடுத்து உருவாக உள்ள திரைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க உள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அஜித் – விக்னேஷ் சிவன் – போனி கபூர் கூட்டணியில் மூன்றாவது முறையாக அடுத்த படத்தில் இணைந்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத் மற்றும் பூனே ஆகிய இடங்களில் படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டன.
இந்த நிலையில், அஜித் இந்த படத்துக்குப் பிறகு நடிக்க இருக்கும் 62-வது படம் குறித்த தகவல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. அதன்படி அஜித் நடிக்கவிருக்கும் 62-வது படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க இருகிறார் என்றும், அந்த படத்திற்கு இசை அமைப்பாளர் அனிருத் இசை அமைக்க இருப்பதாகவும், மேலும், லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான திரைக்கதை வேலைகளில் இப்போது இயக்குனர் விக்னேஷ் சிவன் பிஸியாக இருக்கிறார்.
இந்த படம் உறுதி ஆவதில் பெரும்பங்கு ஆற்றியவர் நயன்தாரா என்று சொல்லப்படுகிறது. அதனால் படத்தில் கதாநாயகியாக நயன்தாராதான் நடிப்பார் என்று சொல்லப்பட்டது. ஆனால் இப்போது நாயகியாக சமந்தாவை நடிக்கவைக்க விக்னேஷ் சிவன் முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. விக்னேஷ் சிவனின் இந்த திடீர் முடிவுக்கான காரணம் என்ன என்று தெரியவில்லை.