Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சமந்தா நடிப்பில்  உருவாகும் புராணப் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சமந்தா நடிப்பில்  உருவாகும் புராணப் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சமந்தா இயக்குனர் குணசேகர் இயக்கத்தில் ஷகுந்தலம் எனும் படத்தில் நடித்து வருகிறார்.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா. தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்து பிரபலமானார். இவர் பிரபல தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை காதலித்து கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இருவரும் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு பதிப்பில் இணைந்து நடித்த போது நட்பாகி அந்த நட்பு காலப்போக்கில் காதலாக மலர்ந்தது. அதையடுத்து திருமணம் செய்துகொண்டு சில ஆண்டுகளிலேயே கருத்து வேறுபாட்டால் பிரிந்தனர்.

இந்நிலையில் விவாகரத்துக்குப் பின் நடிப்பில் பிஸியாகியுள்ள சமந்தா வரிசையாக படங்களில் நடித்து வருகிறார். அப்படி அவர் நடித்த ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ உள்ளிட்ட படங்கள் நல்ல கவனத்தைப் பெற்றன. அதுமட்டுமில்லாமல் சமந்தா இப்போது தனி நாயகியாகவும் பல படங்களில் நடித்து வருகிறார்.

அப்படி அவர் நடிக்கும் படங்களில் ஒன்று ஷகுந்தலம். ஐந்து மொழிகளில் உருவாகி வரும் இந்த திரைப்படம் புராணக் கதை ஒன்றை பற்றிய படமாகும். தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனரான குணசேகர் இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி முடிந்து இரண்டு வாரங்கள் கழித்து நவம்பர் 4 ஆம் தேதி இந்த திரைப்படம் பேன் இந்தியா ரிலீஸாக வெளியாக உள்ளது.

Exit mobile version