புத்தாண்டின் முதல் நாளன்று சமந்தா தேவாலயம் ஒன்றில் மெழுகுவர்த்தி ஏற்றும் புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அதற்கு முன்னதாக விடுமுறை நாட்களில் தான் எடுத்த புகைப்படங்களை பதிவிட்டு இருந்தார்.சோசியல் மீடியாவில் இப்போது ஆக்டிவாக இருக்கும் சமந்தா தன்னுடைய அன்றாட வாழ்வில் நடக்கும் அனைத்து விஷயங்களையும் தன் ரசிகர்களுக்கு தெரிய படுத்துக்கொண்டே இருக்கிறார்.
இந்த வகையில் கடந்த புத்தாண்டு தினந்தன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அப்பதிவில் “என்னை அறிவது என்பது என்னை நேசிப்பதாகும்; நான் ஒரு மனிதனின் நரகமாக இருக்க விரும்புகிறேன்; கடவுளே.. நான் பணிவாக இருப்பது மிக மிக கடினம்; ஆனால் என்னால் முடிந்ததை நான் செய்கிறேன்” என்று பதிவிட்டு இருக்கிறார்.
2021ஆம் ஆண்டு நாக சைதன்யாவும், சமந்தாவும் திருமண வாழ்வில் இருந்து பிரிந்த நிலையில் அவர் இப்போது சோபிதா துலிபாலாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனை மறைமுகமாக சாடும் வகையில் சமந்தா பதிவு ஒன்றையும் வெளியிட்டு இருந்தார்.இதை தொடர்ந்து அவருடைய தந்தையான ஜோசப் பிரபு காலமானார்.இப்படி சமந்தா வாழ்வில் நடக்கும் சோகங்களையும் துயரங்களையும் எதிர்த்து போராட வேண்டும் என்று அவருடைய ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த ஆண்டு சமந்தா, வருண்தவான் நடிப்பில் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியான சிட்டாடல் ஹனி பனி சீரிஸில் சமந்தாவின் ஆக்ஷன் அவதாரம் பெருமளவு கொண்டாடப்பட்டது.அதேப்போல் பங்காரம் படத்தில் நடிப்பதோடு, அந்தப்படத்தை தயாரித்து தெலுங்கில் தயாரிப்பாளராகவும் அறிமுகமாகி இருக்கிறார்.