கே.ஆர்.உதயசங்கர் தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் தனது படைப்புகளுக்காக அறியப்பட்ட ஒரு சிறந்த இயக்குனர் ஆவார். இவர் பதவிப் பிரமாணம் திரைப்படத்தின் மூலம் முதன்முதலில் திரையுலகில் அடி எடுத்து வைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் தமிழ் தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பல திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். தமிழில் விஜயகாந்த்தினை வைத்து இவர் இரண்டு திரைப்படங்களை இயக்கியிருக்கிறார் அதில் முதலாவது பதவி பிரமாணம் மற்றும் இரண்டாவது தவசி ஆகிய படங்கள் ஆகும். ஆனால் இவற்றில் தவசி திரைப்படம் மட்டுமே பாக்ஸ் ஆபிஸில் ஹிட்டானது.
இதன்பின் சில ஆண்டுகள் கழித்து அதாவது 2007 ஆம் ஆண்டு இவர் இயக்கிய திரைப்படம் தான் வேகம். இத்திரைப்படமும் ஜேகே ரித்தீஷ் நடித்த நாயகன் திரைப்படமும் ஒரே நேரத்தில் வெளியானது. வேகம் திரைப்படமானது ஆங்கில திரைப்படத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டு உருவாக்கப்பட்டது.
இந்த இரண்டு திரைப்படங்களும் ஒரே கதையை மையமாக வைத்த படங்கள் என்றாலும் ஜேகே ரித்தேஷ் நடிப்பில் வெளியான நாயகன் திரைப்படமானது ரசிகர்களிடையே மற்றும் பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டானது. ஆனால் வேகம் திரைப்படமானது வேகம் எடுக்காமல் திரையிடப்பட்ட திரையரங்குகளிலேயே சரிவர ஓடாமல் போனது.
எந்த ஒரு இடத்திலும் போட்டி என்று வந்துவிட்டால் இரண்டில் ஏதேனும் ஒன்றுதான் ஜெயிக்க வேண்டும். ஏனெனில் அவற்றிற்கிடையில் ஏதேனும் ஒரு மாறுபாடுகளோ அல்லது வெற்றிக்கான சாத்தியக்கூறுகளோ இருக்கலாம். அப்படி வேகம் திரைப்படத்தில் ஏதோ ஒன்று இல்லாமல் போகவே ஒரே கதையான இந்த இரண்டு திரைப்படங்களிலும் நாயகன் திரைப்படம் மட்டும் வென்றுள்ளது.
குறிப்பு :-
இயக்குனர் கே ஆர் உதயசங்கர் தஞ்சை மாவட்டத்தில் பிறந்திருந்தாலும் தான் எடுத்த எந்த ஒரு திரைப்படத்தையும் தஞ்சை மாவட்டத்தில் படம் பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் தன்னுடைய சொந்த ஊரில் உள்ள தஞ்சை பெரிய கோவிலில் படம் எடுத்தால் அது நன்றாக ஓடாது என அவருக்கு இருந்த மனநிலையை காரணமாகும்.