Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பேய் ஓட்ட சென்ற பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த போலி மந்திரவாதி கைது..!

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், போலி மந்திரவாதிகள் பெண்களை பாலியல் சீண்டல், பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிகமாக வெளிவரும் நிலையில், உத்தரப் பிரதேச மாநிலத்தில் மீண்டும் ஒரு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் சோன்பத்ரா பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தன்னுடைய குடும்பத்தில் ஏற்பட்ட சொந்த பிரச்சனையால் துவண்டு போயிருந்த அவர் அங்கிருந்த மந்திரவாதியை நாடி சென்றுள்ளார்.அப்போது அந்த மந்திரவாதி உனக்கு துஷ்ட சக்தி பிடித்துள்ளதால் அதற்காக பரிகாரம் செய்ய கூறியுள்ளார்.

கடந்த டிசம்பர் 29ம் தேதி அந்த பெண்ணை ராஜா ஷேக் தனது வீட்டிற்கு வரவழைத்துள்ளார். அப்போது, அந்த பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.மேலும், இதனை வெளியில் கூறினால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதற்கிடையில், அந்த பெண் தனக்கு நடந்த கொடுமையை காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

இதனை அடுத்து, ஷேக் ராஜாவை கைது செய்த கவால்துறையினர்எஸ்சி/எஸ்டி வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டங்களில் வழக்கு பதிவு செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version