Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பிக்பாஸ் தர்ஷன் என்னை ஏமாற்றிவிட்டார்: பிரபல நடிகை அதிர்ச்சி பேட்டி

பிக்பாஸ் 3’ நிகழ்ச்சியில் டைட்டில் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட தர்ஷன் கடைசி நேரத்தில் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கும்போதே தர்ஷன் தனக்கு வெளியே ஒரு காதலி இருப்பதாக கூறியிருந்தார். அதே நேரத்தில் நடிகை சனம் ஷெட்டி பிக்பாஸ் தர்ஷன் தான் தனது காதலன் என்றும் பேட்டி கொடுத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் தர்ஷன், சனம்ஷெட்டி ஆகிய இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் திடீரென இன்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் சென்ற சனம் ஷெட்டி, ‘தர்ஷன் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி விட்டு பின்னர் ஏமாற்றிவிட்டதாக புகார் அளித்துள்ளார்.

ஏற்கனவே தனக்கும் தர்ஷனுக்கும் திருமண நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாகவும் ஆனால் திருமணம் செய்ய அவர் மறுப்பதாகவும் தனது புகார் மனுவில் கூறியுள்ளார். இந்த புகாரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது இந்த குறித்து விசாரணை செய்து தன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலிசார் கூறியதாக தெரிகிறது

கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய சனம்ஷெட்டி, ‘தர்ஷன் தன்னை மிரட்டுவதாகவும், திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கூறினால் தன்னுடைய ரசிகர்கள் மூலம் சமூக வலைத்தளத்தில் தன்னை அசிங்கப்படுத்தவுள்ளதாக தர்ஷன் கூறியதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் இருவருக்கும் நடந்த நிச்சயதார்த்த அழைப்பிதழையும் அவர் செய்தியாளர்களிடம் காட்டினார்.

Exit mobile version