Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சனம் ஷெட்டியின் Target இவர்தான்! ஆரம்பித்தது சண்டை!

பிக்பாஸ் 4 சீசன் நேற்று முதல் ஒளிபரப்பாகியது. இந்நிகழ்ச்சியில் ரியோராஜ், சனம்ஷெட்டி, ரேகா, பாலாஜி முருகதாஸ், அனிதா சம்பத், ஷிவானி நாராயணன் ஜித்தன் ரமேஷ், வேல்முருகன், ஆரி, சாம், கேப்ரில்லா, அறந்தாங்கி நிஷா, ரம்யா பாண்டியன், சம்யுக்தா, சுரேஷ் சக்கரவர்த்தி , ஆஜித் உள்ளிட்டர் பங்கேற்றுள்ளனர். பிக் பாஸ் நேற்று ஆரம்பித்த நிலையில் 16 கன்டஸ்டன்ட் உள்ளே நுழைந்து ஒருவருக்கு ஒருவர் அறிமுகமாகி பேசிக்கொண்டனர்.

இந்நிலையில் இரண்டாவது ப்ரமோ வந்துள்ளது. அதில் அனைவரையும் living ஏரியாவிர்க்கு வரச் சொல்லி Heart Break Symbol கொடுக்க சொல்கிறார்கள் போலும் அதுதான் முதல் டாஸ்க் ஆக இருக்கும். அதில் ஷிவானிக்கு சனம் ஷெட்டி Heart Breaking Symbol தருகிறார். மேலும் வயதுக்கு ஏற்ற immaturity இருக்கிறது என்று அவரை கடுப்பேத்தி உள்ளார்.

அடுத்து சக்கரவர்த்தி ஷிவானிக்கு Heart Break Symbol தருகிறார். நீ எப்பொழுது பார்த்தாலும் மூஞ்சை தூக்கி வைத்துக் கொண்டு அங்கயும் இங்கயும் அலைந்து கொண்டிருக்கிறாய். யாருடைய ஒன்றாக ஆகவில்லை என்று அவர் மறுபடியும் ஷிவானியை கடுப்பேத்தி உள்ளார்.அதற்கு சிவானி எனக்கு மிங்குள் ஆக நேரம் எடுத்துக்கொள்ளும் என்று கூற அதற்கு சக்கரவர்த்தி நேற்று வந்த போது எல்லாரும் நன்றாக பழகினாயே இப்போ என்ன ஆயிற்று என்று கடுப்பேத்துகிறார்.

இதை பார்த்த ஹவுஸ் மெட்கள் பாவத்துடன் ஷிவானியை பார்க்கின்றனர். ஷிவானியின் முகமே மாறிவிட்டது.

 

முதல் நாளிலேயே சிவானியை இப்படி அனைவரும் சொன்னது அவருக்கு மிகவும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அவரது முகமே மிகவும் சோகமாகவும் அழுதது போல் ஆகிவிட்டார்.

இதைப்பார்த்த பிக்பாஸ் ரசிகர்கள் சனம் ஷெட்டி முதலிலிருந்தே ஓவராக ஆக்டிங் கொடுத்துக் கொண்டு வருகிறார். ஷிவானி முதலிலேயே ஒரு இண்டர்வியூல் அவர் எனக்கு மிங்குள் ஆக டைம் ஆகும் என்று சொல்லி இருக்கிறார். ஆனால் சனம் ஷெட்டி ஓவராக பண்ணுவதாக தெரிகிறது என்று அவரை வசை பாடி வருகின்றனர்.

Bigg Boss Tamil Season 4  | 5th October 2020 - Promo 2

Exit mobile version