முகத்தை அழகுற செய்யும் சந்தனம்!! சரும வறட்சி இருப்பவர்கள் பயன்படுத்தலாமா?

0
67
sandalwood-that-beautifies-the-face-can-people-with-dry-skin-use-it

பெண்கள் தங்கள் சரும அழகை பராமரிக்க பல்வேறு அழகு சாதனப் பொருட்களை காசு பணம் பாராமல் வாங்கி பயன்படுத்துகின்றனர்.விலை உயர்ந்த பொருட்கள் முக அழகை பராமரிக்க உதவும் என்பது ஒருவித நம்பிக்கையாக உள்ளது.

ஆனால் செயற்கையாக தயாரிக்கப்படும் பொருட்களை விட இயற்கை பொருட்கள் இளமையை தக்க வைக்க உதவுகிறது.குறிப்பாக சந்தனம் போன்ற ஆயுர்வேத பொருட்கள் சரும அழகை பாதுகாக்கிறது.

சந்தன மரத்தின் உலர்ந்த கடைகளை பொடித்து சருமத்திற்கு பயன்படுத்தினால் மட்டுமே இளமை பொலிவை தக்க வைக்க முடியும்.கடைகளில் மாத்திரை அளவில் விற்கப்படும் சந்தனத்தை முகத்திற்கு பயன்படுத்தக் கூடாது.

ஒரிஜினல் சந்தன கட்டையை அரைத்து பயன்படுத்தினால் மட்டுமே முகப் பொலிவை பெற முடியும்.சிலருக்கு வறண்ட சருமப் பிரச்சனை இருக்கும்.சந்தனம் பயன்படுத்த முக்கிய காரணம் சருமத்தில் உள்ள இயற்கை எண்ணெய்கள் நீங்கி பருக்கள் ஏற்படாமல் இருக்கத் தான்.வறண்ட சருமம் உள்ளவர்கள் சந்தனத்தை பயன்படுத்தினால் சரும அரிப்பு,எரிச்சல் போன்றவை அதிகமாகும்.

தரமான சந்தனப் பொடியை மட்டுமே சருமத்திற்கு பயன்படுத்த வேண்டும்.தரமற்ற சந்தனத் தூள் சரும ஆரோக்கியத்திற்கு தீங்கு ஏற்படுத்திவிடும்.முகத்திற்கு சந்தனப் பொடி பயன்படுத்தினால் அதிகபட்சம் 15 நிமிடங்களில் வாஷ் செய்துவிட வேண்டும்.அதிக நேரம் சந்தனத்தை முகத்தில் வைத்திருந்தால் சரும வறட்சி உண்டாகும்.

சந்தனத்துடன் வேதிப்பொருள் கலந்து சருமத்திற்கு பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.இது எதிர்மறை விளைவுகளை உண்டாக்கிவிடும்.சந்தன பேஸ் பேக் பயன்படுத்திய பிறகு சூரிய ஒளி படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.