தேடி வந்த சூப்பர் ஹிட் அஜித் பட வாய்ப்பு – தவறவிட்டதை நினைத்து புலம்பிய சங்கீதா : காரணம் இதுதானாம்!

0
153
#image_title
தேடி வந்த சூப்பர் ஹிட் அஜித் பட வாய்ப்பு – தவறவிட்டதை நினைத்து புலம்பிய சங்கீதா : காரணம் இதுதானாம்!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை சங்கீதா. இவர் தமிழ் படங்களில் மட்டுமல்லாமல், ஒரு சில மலையாள படங்களில் நடித்துள்ளார். தமிழில் இவர் ‘என் ரத்தத்தில் ரத்தமே’, ‘இதயவாசல்’ உட்பட பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

நடிகை சங்கீதாவை தமிழில் முதன்முதலாக கதாநாயகியாக அறிமுகம் செய்தவர் நடிகர் ராஜ்கிரண்தான். இவர் நடிப்பில் வெளியான படமான ‘எல்லாமே என் ராசா’ படத்தில் நடித்த சங்கீதாவின் நடிப்பும், அழகும் ரசிகர்களால் பேசப்பட்டது.

இதற்கு காரணம் என்னவென்றால், சங்கீதாவை பார்க்கும்போது, நம் பக்கத்து வீட்டு பெண் போல இருந்ததுதான். அவருடைய எதார்த்தமான முக அமைப்பு பலருக்கு பிடித்திருந்தது. விஜய்யோடு சேர்ந்து ‘பூவே உனக்கா’படத்தில் நடித்தார். இப்படத்தில் இவருடைய கலகலப்பான கேரக்டர் அதிகமானவரால் பாராட்டப்பட்டது.

சங்கீதா ‘பூவே உனக்காக’ படத்தில் நடித்தபோது, அதில் பணியாற்றிய ஒளிப்பதிவாளரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சில வருடங்களாக குழந்தை, குடும்பம் என்று இருந்த சங்கீதா தற்போது மீடியாக்களில்  முகம் காட்டி வருகிறார்.

ஒரு சேனலுக்கு நடிகை சங்கீதா பேட்டி கொடுத்தார். அப்போது அவர் பேசுகையில், ‘பூவே உனக்காக’ படத்தில் நான் நடிக்கும் போது இயக்குனர் விக்ரமன் மட்டும்தான் ரொம்ப பெரிய ஆளாக எனக்கு தெரிந்தார். அது நடிகர் விஜய் படம்தான் என்றென்றால் எனக்கு தோன்றவில்லை. எனக்கு அஜித்தின் நடிப்பில் வெளியான காதல் கோட்டை படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால், விக்ரமன் சார் படத்தில் நடிக்க வேண்டும் என்பதற்காக அந்த படத்தை தவறவிட்டேன்.

தற்போது விஜய்யை பார்க்கும்பொது ரொம்பவே எனக்கு பிரமிப்பாக உள்ளது. சினிமாவில் அவரை திரையில் பார்க்கும்போது அவரை தவிர வேறு யாரையும் நான் பார்ப்பது கூட இல்லை. ஒரு ரசிகையாக அவரை ரசிக்கிறேன் என்றார்.