Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இனி காலையில் இந்த blue tea குடியுங்கள்..!! உடல் எடை குறைய, முகம் பளபளக்க, சர்கரை நோய்.. அனைத்திற்கும் ஒரே தீர்வு

sangu poo

Version 1.0.0

sangu poo: நம் உடலில் உள்ள நோய்களை தீர்க்க உதவும் இந்த பூக்களில் ஒன்று தான் இந்த சங்குப்பூ. சங்குப்பூ தமிழர்களின் வாழ்வியலில் சங்க காலத்தில் இருந்தே தொன்று தொட்டு வருகிறது. சங்கக்கால பாடல்களில் இதனை கருவிளை பூ என்று அழைத்தார்கள்.  இது தற்போது இரண்டு நிறங்களில் கிடைத்து வருகிறது. ஒன்று நீலம் மற்றொன்று வெள்ளை. இரண்டுமே மருத்துவக் குணம் (butterfly pea flower benefits in Tamil) வாய்ந்தது.

சங்குப்பூவின் பயன்கள்

சங்குப்பூவை காலையில் வெறும் வயிற்றில் இந்த சங்குப்பூ டீயை குடித்து வந்தால் பெண்களுக்கு ஏற்படும் வயிற்று வலி தீரும்.

மேலும் இந்த சங்குப்பூவை நீரில் கொதிக்க வைத்து குடித்து வந்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும். இது நீரிழிவு நோய் உள்ளவர்கள் நாள் தோறும் குடித்து வர இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக வைத்துக்கொள்கிறது.

மேலும் சங்குப் பூவில் ஆன்டி கிளைகோஜன் இருப்பதால் இது வயது முதிர்வை தடுக்கிறது. பார்ப்பதற்கு எப்போதும் இளமையாக வைத்துக்கொள்கிறது.

சங்குப் பூ செடியின் வேரை தண்ணீரில் ஊறவைத்து அதனை குடித்து வர சிறுநீர் பெருகும். இதனால் சிறுநீர் தொற்று ஏற்படாது. மேலும் இதன் இலைகளுடன், இஞ்சி சேர்த்து கொதிக்க வைத்து குடித்து வந்தால் நுரையீரல் பிரச்சனை தீரும்.

மேலும் ஞாபக மறதி உள்ளவர்கள் இதனை சாப்பிட்டு வர மறதி நோய் தீரும்.

மேலும் இந்த பூக்களை நன்றாக அரைத்து, அதனுடன் கடலை மாவு சேர்த்து முகத்தில் பூசி வர முகம் பொலிவு கொடுக்கும்.

மேலும் இந்த பூவை டீ வைத்து குடிப்பவர்களுக்கு, மனக்கவலை குறையும், கேன்சர் செல் உருவாவதை தடுக்கும், உடல் எடை குறைய உதவுகிறது.

செரிமான பிரச்சனையை தடுக்க உதவுகிறது.

இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது.

இந்த பூவில் ஆந்தோசயனின் இருப்பதால் கண்கள் சார்ந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். பார்வைகள் நன்றாக தெரியும்.

மேலும் வேலையின் காரணமாக ஏற்படும் உடல் வலியை இது குறைக்கும்.

சங்குப்பூ டீ – sangu poo tea

ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் 5 முதல் 6 சங்குப்பூவை போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.

பிறகு வெதுவெதுப்பான நிலை வந்ததும் தேன் கலந்து குடிக்கலாம். அல்லது கருப்பட்டி, நாட்டு சர்க்கரை கலந்து வெறும் வயிற்றில் குடிக்கலாம்.

மேலும் தேன் கலக்காமல் எலுமிச்சை பழம் மட்டும் கலந்து குடிக்கலாம்.

இந்த சங்குப்பூவை வெறும் தண்ணீரில் கொதிக்க வைத்து குடிக்கலாம். இதற்கு எந்த வித சுவையும் இருக்காது.

மேலும் படிக்க: kummatti kai benefits: வழுக்கை தலையில் முடி வளர, சர்க்கரை நோய், உடல் எடை குறைக்க, இந்த ஒரு காய் போதும்..!! இது தெரியாம போச்சே..!!

Exit mobile version