விடாமுயற்சி திரைப்படத்தின் வில்லன் சஞ்சய் தத் இல்லையாம்!!! படக்குழு வெளியிட்ட தகவல் என்ன!!?

0
138
#image_title

விடாமுயற்சி திரைப்படத்தின் வில்லன் சஞ்சய் தத் இல்லையாம்!!! படக்குழு வெளியிட்ட தகவல் என்ன!!?

நடிகர் அஜித் தற்பொழுது நடித்து வரும் விடாமுயற்சி திரைப்படத்தில் வில்லனாக நடிப்பது குறித்து தற்பொழுது தகவல் கிடைத்துள்ளது. அதன்படி நடிகர் சஞ்சய் தத் அவர்கள் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்கவில்லை என்று தகவல் கிடைத்துள்ளது.

நடிகர் அஜித் அவர்கள் துணிவு திரைப்படத்திற்கு பிறகு விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். விடாமுயற்சி திரைப்படத்தை இயக்குநர். மகிழ் திருமேனி அவர்கள் இயக்கி வருகின்றார். விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்பொழுது அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது.

விடாமுயற்சி திரைப்படத்தில் நடிகர்கள் சஞ்சய் தத், திரிஷா, ரெஜினா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். சமீபத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் அவர்கள் விடாமுயற்சி திரைப்படத்தில் மூன்றாவது கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல்கள் கிடைத்தது.

விடாமுயற்சி திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கின்றார். லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் சுபாஷ்கரண் அவர்கள் விடாமுயற்சி திரைப்படத்தை தயாரிக்கின்றார். இந்நிலையில் விடாமுயற்சி திரைப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிப்பது யார் என்பது குறித்து தற்பொழுது தகவல் கிடைத்துள்ளது.

விடாமுயற்சி திரைப்படத்தில் நடிகர் சஞ்சய்தத் அவர்கள் முன்பு வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றார் என்று தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் வேறு ஒரு நடிகர் விடாமுயற்சி திரைப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

அதாவது விடாமுயற்சி திரைப்படத்தில் நடிகர் அர்ஜுன் அவர்களும் நடிக்கிறார். ஆனால் நடிகர் அர்ஜுன் அவர்கள்தான் இந்த திரைப்படத்தில் வில்லன் கதிப்பாத்திரத்தில் நடிப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

நடிகர் அர்ஜூன் அவர்கள் ஏற்கனவே இன்று(அக்டோபர்19) வெளியாகியுள்ள லியோ திரைப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இந்நிலையில் விடாமுயற்சி திரைப்படத்திலும் நடிகர் அர்ஜூன் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிப்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.

நடிகர் அர்ஜூன் மற்றும் நடிகர் அஜித் இருவரும் 12 வருடங்களுக்கு முன்னர் வெளியான மங்காத்தா திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இந்த நிலையில் மீண்டும் இந்த காம்போவில் ஒரு திரைப்படம் உருவாவதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.