Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

BREAKING: பட்டாசு கடையில் பயங்கர தீ விபத்து.! 4 பேர் உயிரிழப்பு..வீடியோ.!!

சங்கராபுரம் பட்டாசு கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 4பேர் உயிரிழந்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் பட்டாசு கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். 10க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் கவலைக்கிடமான நிலையில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், அருகில் இருந்த பேக்கரியில் 6 சிலிண்டர்கள் வெடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும், தீயை அணைக்கும் பணியில் தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர் திடீரென ஏற்பட்ட இந்த தீ விபத்தால் சங்கராபுரம் கள்ளக்குறிச்சி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பட்டாசு விபத்து ஏற்பட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தீபாவளி பண்டிகை நெருங்குவதால் முறையான பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்ற பட்டாசு கடைகளுக்கு அரசு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்திற்கான காரணம் என்னவென்று இதுவரையில் தெரியவில்லை இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version