சங்கடஹர சதுர்த்தி விரதத்தின் பலன்கள்!

0
213

பௌர்ணமி தினத்தை அடுத்து வரும் சங்கடஹர சதுர்த்தி என்றால் துன்பம் ஹர என்றால் அழைத்தல் துன்பங்களை அழிக்கும் உருவமே சங்கடஹர சதுர்த்தி ஒவ்வொரு மாதமும் வரும் சங்கடஹர சதுர்த்தி நாளில் விரதமிருந்தால் குடும்பத்தில் சுபிட்சமும் ஏற்படுவதுடன் தடைகளின்றி அனைத்து காரியங்களும் வெற்றியடையும்.

இந்த சதுர்த்தி திதியானது விநாயகப் பெருமானை வேண்டி விரதமிருக்க உகந்த நாள் என்று சொல்லப்படுகிறது. எண்ணியது அனைத்தையும் வழங்கும் இந்த சங்கடஹர சதுர்த்தி ஒரு எளிமையான விரதம் என்று சொல்லப்படுகிறது.

இந்த விரதத்தை கடைபிடித்தால் நோய்கள் யாவும் குணமடைந்து ஆரோக்கியம் அதிகரிக்கும் வாழ்க்கையில் தொடர்ந்து பலவகை துன்பங்களுக்கு உள்ளாகி வருபவர்களுக்கு நிலையான நீடித்த சந்தோஷம் கிடைக்கும்.

மிகச் சிறப்பான கல்வி அறிவு புத்தி கூர்மை நீண்ட ஆயுள் நிலையான செல்வம் என்று பலவிதமான நன்மைகள் நடைபெறும் என்று சொல்லப்படுகிறது. சனி தோஷத்தால் பாதிக்கப்படுபவர்கள் இந்த விரதத்தை மேற்கொண்டு வந்தால் சனியின் தாக்கம் குறையும் என சொல்கிறார்கள்.

வளர்பிறை சதுர்த்தியில் வானில் சந்திரனைப் பார்ப்பது அல்லது நான்காம் பிறையைப் பார்ப்பது கேடு விளைவிக்கும் என்று சொல்லப்படுகிறது பௌர்ணமிக்குப் பிறகு வரக்கூடிய தேய்பிறை சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்தது என சொல்லப்படுகிறது.

இதுவே சங்கடஹர சதுர்த்தி ஆகும். இது செவ்வாய்க்கிழமை வருவது மிகவும் சிறப்பு வருடத்தின் அனைத்து சங்கடஹர சதுர்த்தி வழிபாடுகளையும் செய்த பலன் ஒரு மஹா சங்கடஹர சதுர்த்தியில் வழிபாடு செய்வதால் கிடைக்கப் பெறலாம். இந்த விரதம் தொடர்பான புராண தகவல்கள் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.

முதல் முதலில் தன்னுடைய தாய் பார்வதிதேவிக்கு விநாயகரே இந்த விரதத்தை சொல்லிக் கொடுத்ததாக சொல்லப்படுகிறது. சங்கடஹர சதுர்த்தியின் மகிமையை முருகப் பெருமான் ஒரு மனிதருக்கு எடுத்துரைத்ததாக கந்த புராணம் தெரிவிக்கிறது.

கிருஷ்ணர் நான்காம் பிறையை பார்த்ததால் அவருக்கு அபவாதம் உண்டானது. ஆகவே அவர் சங்கடஹர சதுர்த்தி விரதத்தை மேற்கொண்டு விநாயகரை பூஜை செய்து அதிலிருந்து மீண்டார் என்றும் புராணங்கள் தெரிவிக்கின்றன.

வனவாசத்தின்போது கண்ணபிரான் இந்த விரதம் தொடர்பாக பஞ்சபாண்டவர்களிடம் எடுத்துரைத்ததாகவும் அதனடிப்படையில் அதனை செய்து தர்மர் நாட்டை மீண்டும் அடைந்ததாகவும் புராணங்கள் சொல்கின்றன.

இந்த நாளில் தான் விநாயகப் பெருமானின் அருளைப் பெற்று சந்திரன் சாப விமோசனம் அடைந்தான் ஆகவே இந்த நாளில் சந்திரன் காரணமாகிறான் என்றும் சொல்லப்படுகிறது..

தமயந்தி நளனை கரம் பிடித்தது இந்த விரதத்தின் மகிமை காரணமாகதான் என்று நூல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விரதத்தை முதன்முதலில் அங்காரகன் எனப்படும் செவ்வாய் கடைப்பிடித்து நவக்கிரக பதவி அடைந்ததாக புராணங்கள் குறிப்பிடுகின்றன. ஆகவே தான் செவ்வாய்க்கிழமை வரும் விரதம் சிறப்பாக கருதப்படுகிறது.