Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

குழந்தை பாக்கியம் அருளும் சந்தான கோபால விரதம்!

நம்முடைய முன்னோர்கள் பல்வேறு விரதங்களை ஏற்படுத்திக் கொடுத்து, அதனை மேற்கொள்ளும் வழிகளையும் அறிவுறுத்தி உள்ளார்கள். அதில் ஒன்றுதான் சந்தான கோபால விரதம். புரட்டாசி மாதத்தில் அமாவாசை அடுத்து வரும் பௌர்ணமி தினத்தில் குழந்தை இல்லாத தம்பதிகளால் பகவான் கிருஷ்ணனை வேண்டி இந்த விரதம் மேற்கொள்ளப்படுகிறது. விரதமிருந்து கிருஷ்ணரை வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

சந்தான கோபால விரதத்தை முழுமையாக பின்பற்ற இயலாதவர்கள் பிரத்யேகமாக சில ஆலயங்களுக்கு சென்று வழிபட்டால் பலன் கிடைக்கும். அத்தகைய தளங்களில் ஒன்று தான் ஸ்ரீஸ்வதந்த்ர லட்சுமி நாயக சமேத ஸ்ரீ யுகநாராயண பெருமாள் கோவில்.

சந்தான பாக்கியத்திற்கும் மகாலட்சுமி கடாட்சியத்துக்கும் உகந்த மந்திரங்கள் அடங்கிய ஸ்ரீ லட்சுமி நாராயண இருதயம் பகவான் கிருஷ்ணனே திருவாய் மலர்ந்தருளு தாக ஸ்ரீமந் நிகழாந்த தேசிகன் அருளிச்செய்த யாதவப்யுதயம் மகா காவியத்தில் காணப்படும் கோவர்தன கிரி மகாத்மியம் பிரம்மாவின் புத்திரர் சனத்க்குமாரர் அருளிச்செய்த ஸ்ரீ சந்தான கோபால தோத்திரம் ஆகிய மூன்றும் இந்த தளத்தில் பெருமாள் சன்னதியில் பாராயணம் செய்யப்படுகிறது. இதை கேட்பவர்களுக்கு சந்தான பிராப்தி கிடைப்பது உறுதி என்றும் சொல்லப்படுகிறது.

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே இருக்கின்ற மேல் வெண்பாக்கம் ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் கோவிலுக்கு சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரத்தை அடுத்துள்ள பாலு செட்டி சந்திரம் தாமல்தாண்டி பனப்பாக்கம் செல்லும் சாலையில் செல்ல வேண்டும்.

Exit mobile version