Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சந்தானத்தின் வித்தியாசமான லுக்கில் பிஸ்கோத் போஸ்டர் !

சந்தானத்தின் வித்தியாசமான லுக்கில் பிஸ்கோத் போஸ்டர் !

தான் நடித்து வரும் பிஸ்கோத் என்ற திரைப்படத்தின் போஸ்டரை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் சந்தானம்.

2004 ஆம் ஆண்டு மன்மதன் படத்தின் மூலம் காமெடியனாக அறிமுகமான சந்தானம் வடிவேலுவின் திரையுலக விலகலுக்குப் பின் உச்சநட்சத்திரமாக மாறினார். அதன் பின் தொலைக்காட்சியில் இருந்து வந்த சிவகார்த்திகேயனின் வெற்றியைப் பார்த்து தானும் ஹீரோ அரிதாரம் பூசினார். ஆரம்பத்தில் அவர் நடித்த கண்ணா லட்டு திண்ண ஆசையா போன்ற படங்கள் வெற்றி பெற்றாலும் ஆக்‌ஷன் ரூட்டில் அவர் இறங்கிய படங்களான வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் போன்ற படங்கள் சறுக்கின. அதனால் சந்தானம் சறுக்கி விட்டாரோ என்று நினைத்து வேளையில் தில்லுக்கு துட்டு 1,2 , ஏ 1 ஆகிய படங்களின் மூலம் மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பியுள்ளார்.

இந்நிலையில் இப்போது சந்தானம் மீண்டும் வரிசையாக படங்களில் கமிட் ஆகி வருகிறார். இந்த வரிசையில் ஏ1 பட இயக்குனருடன் மீண்டும் ஒரு படத்தில் ஒப்பந்தமான அவர் இப்போது இயக்குனர் அர் கண்ணன் இயக்கம் மற்றும் தயாரிப்பில் உருவாகும் பிஸ்கோத் படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். கண்ணனின் இயக்கத்தில் சந்தானம் நடித்த கண்டேன் காதலை மற்றும் வந்தான் வென்றான் ஆகிய படங்களின் நகைச்சுவைக் காட்சிகள் ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டவை. இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இந்த படத்துக்கு அர்ஜுன் ரெட்டி படத்துக்கு இசையமைத்த ரதன் இசையமைக்கிறார்.

இயக்குனர் ஆர் கண்ணன் இதற்கு முன்னர் ஜெயம் கொண்டான், வந்தான் வென்றான், சேட்டை , கண்டேன் காதலை ஆகிய படங்களில் சந்தானத்தோடு பணிபுரிந்துள்ளார். அந்த படங்களில் சந்தானத்தின் நகைச்சுவைக் காட்சிகள் சிறப்பாக அமைந்து ரசிகர்களிடம் பாராட்டுகளைப் பெற்றன. இதையடுத்து இவர்கள் இருவரும் இணைந்துள்ள படம் என்பதால் எதிர்பார்ப்பு உருவானது. ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சந்தானம் தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.  இந்த போஸ்டரில் 80 களின் ரெட்ரோ லுக்கில் சந்தானம் புல்லட்டை ஓட்டி வருவது மாதிரி அமைக்கப்பட்டு உள்ளது.

Exit mobile version