Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

‘மாட்னா காலி… அதுவரைக்கும் ஜாலி’… சந்தானம் நடிக்கும் ‘குலுகுலு’ துள்ளலான முதல் சிங்கிள்

‘மாட்னா காலி… அதுவரைக்கும் ஜாலி’… சந்தானம் நடிக்கும் ‘குலுகுலு’ துள்ளலான முதல் சிங்கிள்

சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள குலுகுலு படத்தின் முதல் சிங்கிள் பாடல் ரிலீஸாகியுள்ளது.

மேயாத மேன் மற்றும் ஆடை ஆகிய படங்களின் இயக்குனர் ரத்னகுமார் இயக்கும் ‘குலு குலு’ படத்தில் சந்தானம் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் சந்தானம் லாரி டிரைவராக நடித்துள்ளார். இந்தியா முழுவதும் பல இடங்களில் படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளனர். படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் அனைத்தும் முடிந்து ஜூலை 29 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இந்த படத்தின் தமிழக விநியோக உரிமையை சந்தானத்தின் நெருங்கிய நண்பரான நடிகர் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. வரிசையாக முன்னணி நடிகர்களின் படங்களை இந்த ஆண்டு முழுவதும் ரெட் ஜெயண்ட் வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது. முன்னதாக குலு குலு படத்தின் தொலைக்காட்சி உரிமம் சன் தொலைக்காட்சியால் கைப்பற்றப்பட்டது.

இந்நிலையில் இப்போது படத்தின் ப்ரமோஷன் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதையடுத்து படத்தில் இடம்பெற்றுள்ள முதல் சிங்கிள் பாடலான ‘மாட்னா காலி’ பாடலின் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த பாடலில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனும் தோன்றியுள்ளார். பாடலை துள்ளலாகவும் எளிமையாக அனைவரையும் கவரும் விதமாகவும் இயக்குனர் ரத்னகுமார் எழுதியுள்ளார். இந்த பாடல் வீடியோ தற்போது இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.

Exit mobile version