Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

3வேடத்தில் சந்தானம் நடித்த பிஸ்கோத் படத்தின் மிரளவிடும் ட்ரெயிலர் ரிலீஸ்!

சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக திகழும் சந்தானம் தனது இயல்பான நகைச்சுவையால் மக்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் குணம் உடையவர். 

 தற்பொழுது சந்தானம் நடிப்பில் உருவாகியிருக்கும் பிஸ்கோத் படத்தின் ட்ரெயிலர் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் 3 வேடங்களில் நடிக்கும் சந்தானம், மன்னர் வேடத்திலும் வருகிறார். கொரோனா ஊரடங்குக்கு முன்பே இதன் படப்பிடிப்பு முடிந்து விட்ட நிலையில் தற்போது ரிலீசுக்கு தயராக உள்ளது.

பாகுபலி படத்தின் சில சீரியஸான காட்சிகளையும் வசனங்களையும் காமெடியாக ஃபாலோ செய்துள்ளனர். அதாவது சவுகார் ஜானகி 12 ஆம் நூற்றாண்டு காலத்தில் வாழ்ந்த மன்னரின் கதையை சொல்வது போல் தொடங்குகிறது ட்ரெயிலர்.

அதில் பாகுபலி படத்தின் பல்வால் தேவன் போல் நடித்துள்ளார் ஆனந்த்ராஜ். தனக்குதானே கட் அவுட் வைக்கிறார். அப்போது பாகுபலி ஸ்டைலில் 100 அடி உயர கட் அவுட் 10 உயிரையாவது பலி கேட்காதா என வசனம் பேசுகிறார்.

இந்த டீஸரை பார்த்த ரசிகர்கள் அனைவரும் வயிறு குலுங்க குலுங்க சிரித்து வருகின்றனர்.

Exit mobile version