Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஹெல்த்துக்கு சப்போர்ட் தரும் சப்போட்டா!! இந்த பழத்தில் உள்ள 10 மருத்துவ குணங்கள் தெரியுமா?

பழங்கள் என்றாலே ஊட்டச்சத்துக்கள்,ஆரோக்கிய நன்மைகள் நிறைந்தவை என்பது நமக்கு தெரியும்.இதில் சிலவகை பழங்களின் சுவை மற்றும் மருத்துவ குணங்கள் தனித்துவம் வாய்ந்து காணப்படும்.அப்படி ஒரு பழம்தான் சப்போட்டா.

இந்த பழத்தில் சர்க்கரை கொட்டியது போன்ற இனிப்பு இருக்கும்.வாசனை மற்றும் சுவையில் சப்போட்டா தனித்து காணப்படுகிறது.சப்போட்டா பழத்தில் ஜூஸ் செய்து குடித்தால் அவ்வளவு ருசியாக இருக்கும்.சப்போட்டா பழத்தில் வைட்டமின் சி சத்து நிறைந்து காணப்படுகிறது.இந்த சப்போட்டா பழத்தை சாப்பிடுவதால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.இந்த பழம் குளிர் காலத்தில் பிஞ்சி பிடித்து கோடை காலத்தில் விளைச்சலுக்கு வருகிறது.

சப்போட்டா பழ ஆரோக்கிய நன்மைகள்:

1)நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சப்போட்டா பழம் சாப்பிடலாம்.செரிமானப் பிரச்சனையை சரி செய்யும் அபூர்வ மருந்து சப்போட்டா.

2)உடல் சூட்டை தணிக்க செய்கிறது.வயிற்றுப்போக்கு பிரச்சனை இருந்தால் சப்போட்டா சாப்பிட்டு சரி செய்யலாம்.

3)மலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்க உதவுகிறது.சப்போட்டாவில் இருக்கின்ற நார்ச்சத்து குடல் இயக்கத்திற்கு உதவுகிறது.

4)சப்போட்டா ஜூஸ் பருகினால் பெருங்குடல் ஆரோக்கியம் மேம்படும்.காலை நேரத்தில் சப்போட்டா பழம் சாப்பிட்டால் குடல் எரிச்சல்,வாய்ப்புண் போன்ற பாதிப்புகள் குணமாகும்.

5)சப்போட்டாவில் இரும்பு,கால்சியம் போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.எலும்பு வலிமைக்கு சப்போட்டா சிறந்த நிவாரணமாக இருக்கும்.

6)பெண்களுக்கு எலும்பு தேய்தல் பிரச்சனை அதிகமாக இருக்கிறது.இதை சரி செய்ய சப்போட்டா பழம் சாப்பிடலாம்.

7)சளி,இருமல் பாதிப்பு குணமாக சப்போட்டா பழச்சாறு செய்து பருகலாம்.சப்போட்டாவில் இருக்கின்ற வைட்டமின் ஏ சத்து கண் பார்வை திறனை மேம்படுத்த உதவுகிறது.

8)இதயம் சம்மந்தபட்ட பிரச்சனைகள் குணமாக சப்போட்டா பழம் சாப்பிடலாம்.இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்க சப்போட்டா பழம் சாப்பிடலாம்.

9)கர்ப்பிணி பெண்களுக்கு உடல் சோர்வு ஏற்படாமல் இருக்க சப்போட்டா ஜூஸ் செய்து பருகலாம்.தலைசுற்றல்,வாந்தி போன்ற பாதிப்புகள் குணமாக சப்போட்டா ஜூஸ் பருகலாம்.

10)சரும நோய்களுக்கு சப்போட்டா சிறந்த நிவாரணியாக திகழ்கிறது.முடி வளர்ச்சிக்கு சப்போட்டா பழம் சாப்பிடலாம்.

Exit mobile version