Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தெய்வ திருமகளில் நடித்த சாரா அர்ஜுன்! தற்போது இடம்பெற்றுள்ள பிரம்மாண்டமான திரைப்படம்!

Sara Arjun who acted in Deiva Thiruma! The biggest movie ever!

Sara Arjun who acted in Deiva Thiruma! The biggest movie ever!

தெய்வ திருமகளில் நடித்த சாரா அர்ஜுன்! தற்போது இடம்பெற்றுள்ள பிரம்மாண்டமான திரைப்படம்!

நிஜ கதைகளோடு கற்பனை கதாபாத்திரங்களை வைத்து மிகவும் சுவாரஸ்யமான கதையை படமாக எடுத்து இயக்குனர் மணிரத்னம் சாதித்துள்ளார். இந்த படம் வரும் 30 ஆம் தேதி திரையில் வரும் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம்  சென்னையில் பிரம்மாண்டமாக இந்த படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது .

அந்த விழாவில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்ட நிலையில். ரஜினி ,கமல்ஹாசன் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். தமிழ் சினிமாவில் அனைவராலும் பேசப்பட்ட படம் தெய்வ திருமகள். அதில் விக்ரமின் மகளாக நடித்து பெரிய அளவில் பிரபலம் ஆனவர்.

தற்போது பொன்னியின் செல்வன் படத்திலும் நடித்துள்ளார்.அந்த தகவல் தற்போது டிரைலரில் தான் தெரிந்துள்ளது.ஐஸ்வர்யா ராய் நடித்துள்ள நந்தினி வேடத்தின் சிறு வயது கதாபாத்திரமாக சாரா அர்ஜுன் நடித்துள்ளார்.இது தற்போது ரசிகர்களின் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

Exit mobile version